என் மலர்
வழிபாடு
29-ந்தேதி குடமுழுக்கு நடக்கிறது: ஒப்பிலியப்பன் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது
- இன்று 2-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடக்கிறது
- மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருகிற 29-ந்தேதி வெங்கடாசலபதி சுவாமி கோவிலுக்கும், வடக்கு வீதியில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலுக்கும் குடமுழுக்கு நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை கோவில் வளாகத்தில் 28 வேதிகைகள், 34 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150 வேத விற்பன்னர்கள் வந்து நான்கு வேதங்களில் வேத பாராயணம் நடைபெற்றது. முதல் கால யாக சாலை பூஜையில் பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், அரசு குரூப்ஸ் தலைவர் திருநாவுக்கரசு, இ.பி. சில்க்ஸ் இ.பி. சேதுராமன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா வீரகுமார், அபிராமி கார்த்திகேயன், எம். பாலச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் மகேஸ்வரி துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு நேற்று முதல் பூமி தேவி திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கும் பணி தொடங்கியது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.