என் மலர்
வழிபாடு
X
ராஜகோபால சுவாமி கோவிலில் கருடசேவை
Byமாலை மலர்16 July 2022 9:33 AM IST
- ராஜகோபுரம், சுவாமி, தாயார் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.
- வாகனத்திலும், கிருஷ்ணன் தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா சென்றனர்.
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கோவிலில் காலை 6.30 மணி முதல் சிறப்பு யாகம், தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு ஹோமம், திருமஞ்சனம், ராஜகோபுரம், சுவாமி, தாயார் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு ராஜகோபால சுவாமி மற்றும் அழகிய மன்னார் இரட்டை கருட சேவை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி தாயார் அன்ன வாகனத்திலும், பூதேவி தாயார் கஜலட்சுமி வாகனத்திலும், கிருஷ்ணன் தோளுக்கினியான் வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா சென்றனர்.
மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் நெல்லை கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிவகாமசுந்தரி அம்பாள் சமேத அழியாபதீஸ்வரர் கோவிலிலும் வருசாபிஷேகம் நடந்தது.
Next Story
×
X