என் மலர்
வழிபாடு
X
அரங்கநாதர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
Byமாலை மலர்19 March 2023 2:53 PM IST
- உச்சிக்கால பூஜை, சாற்றுமழை சேவிக்கப்பட்டு மகா ஆரத்தி நடந்தது.
- பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஏகாதசியையொட்டி அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை, விஷ்வக் சேனர் ஆவாஹனம், புண்ணியா வசனம், கலச ஆவாஹனம் நடந்தது.
பின்னர் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதர் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் பட்டுக்குடையுடன், மேள வாத்தியம் முழங்க கோவிலில் வலம் வந்து சுவாமி ஆஸ்தானம் சேர்ந்தார்.
அங்கு உச்சிக்கால பூஜை, சாற்றுமழை சேவிக்கப்பட்டு மகா ஆரத்தி நடந்தது. இதில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Next Story
×
X