என் மலர்
வழிபாடு
தூய சந்தனமாதா ஆலய ஆண்டு திருவிழா
- 30-ந்தேதி சனிக்கிழமை மின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.
- இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் தாயான தூய சந்தன மாதா ஆலயம் கீழையூர் ஒன்றியம், சோழவித்யாபுரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
அதன்படி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கருங்கண்ணி பங்குத்தந்தை டேவிட்செல்வகுமார் கொடியை புனிதம் செய்து ஏற்றிவைத்தார்.அப்போது வாணவேடிக்கை நடந்தது.
இதை தொடர்ந்து நாகை மறைமாவட்ட அதிபர் பன்னீர்செல்வம் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் சமூகத்தலைவர் மரியசூசை,செயலாளர் சுந்தர் மற்றும் சோழவித்யாபுரம் கிராம மக்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர்பவனி வருகிற 30-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது.