search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு
    X

    திருப்பதி கோவிலில் ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு

    • திருப்பாவாடை ஆர்ஜித சேவை மீண்டும் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.
    • விமானத்தில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே நேரடி முன்பதிவு டிக் கெட்டுகள் வழங்கப்படும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்வதைக் கருத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை ஆயிரமாக குறைத்துள்ளது.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் ஸ்ரீவாணி அறக்கட்டளையை ஏற்படுத்தியது. இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குபவர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கியது.

    அதன்படி, பக்தர்கள் நன் கொடை அளித்து ஏழுமலையானை தரிசித்து வந்தனர். இதுவரை பக்தர்களின் தேவைக்கு ஏற்றபடி வழங்கப்பட்டு வந்த ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி பிரேக் டிக்கெட்டுகளின் எண்ணிக் கையை, தேவஸ்தானம் ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகளாக குறைத்துள்ளது.

    அதில், 750 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமும், மீதமுள்ள 250 டிக்கெட்டுகள் ரேணிகுண்டா விமான நிலையத்தில் உள்ள தற்போதைய முன்பதிவு மையத்தில் பக்தர்களுக்கு நேரிடையாக வழங்கப்படுகிறது.

    தேவஸ்தானம் ஏற்கனவே 500 ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. மேலும், 250 டிக்கெட்டுகள் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.

    இதுவரை திருப்பதி பஸ் நிலையம் எதிரில் உள்ள மாதவம் ஓய்வு இல்லத்தில் வழங்கப்பட்டு வந்த ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் வழங்கும் மையத்தை தேவஸ்தானம் மூடியது.

    இனிமேல் விமானம் மூலம் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமே ஸ்ரீ வாணி அறக்கட்டளையின் விஐபி பிரேக் தரிசனத்தின் நேரடி முன்பதிவு டிக் கெட்டுகள் வழங்கப்படும். கொரோனா காலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த திருப்பாவாடை ஆர்ஜித சேவை மீண்டும் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

    இதற்காக பக்தர்கள் திருமலையில் உள்ள சிஆர்ஓ கவுன்ட்டரில் தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மின்னணு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து தினமும் 25 பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    குழுக்களில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் தங்கள் டிக்கெட்டுகளை பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 58,184 பேர் தரிசனம் செய்தனர்.16,122 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.20 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×