என் மலர்
வழிபாடு
X
அரவிந்தர் ஆசிரமத்தில் பக்தர்கள் தரிசனம்: ஆரோவில்லில் தீ மூட்டி கூட்டு தியானம் நடந்தது
Byமாலை மலர்16 Aug 2022 10:08 AM IST
- திறந்தவெளி கலையரங்கில் ‘போன் பயர்’ நிகழ்ச்சி நடந்தது.
- வெளிநாட்டினர், உள்ளூர்வாசிகள் தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
மகான் அரவிந்தரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் சிறப்பு தரிசனம் நடந்தது. மேலும் அரவிந்தர், அன்னை பயன்படுத்திய அறைகள் பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கலந்துகொண்டனர். வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் ஆசிரமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக புதுவையை அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் மாத்திர் மந்திர் திறந்தவெளி கலையரங்கில் நேற்று அதிகாலை 'போன் பயர்' நிகழ்ச்சி நடந்தது. இதில் வெளிநாட்டினர், உள்ளூர்வாசிகள் தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
X