என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![காணிப்பாக்கம் வரசித்தி விநாயகருக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகருக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்](https://media.maalaimalar.com/h-upload/2022/09/05/1756860-kanipakkam.jpg)
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகருக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்யப்பட்டது.
- சாமி படம், பிரசாதம் வழங்கினர்.
சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ஆகியோர் பங்கேற்று பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.
கோவிலுக்கு வந்த அவர்களை, காணிப்பாக்கம் விநாயகர் கோவில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். சாமி படம், பிரசாதம் வழங்கினர். அப்போது காணிப்பாக்கம் விநாயகர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகன்ரெட்டி, கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.