என் மலர்
வழிபாடு
ஸ்ரீவைகுண்டம் அருகே இரட்டை திருப்பதி கோவிலில் கருட சேவை
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இரட்டை திருப்பதி கோவிலில் கருடசேவை நடந்ததை படத்தில் காணலாம்.
நவ திருப்பதிகளில் 4-வது திருப்பதியான தொலைவில்லி மங்கலத்தில் உள்ள இரட்டை திருப்பதி கோவிலில் கடந்த 6-ந்தேதி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்து வந்தது.
நேற்று 5-வது நாளில் காலை 8 மணிக்கு விஸ்வரூபம், யாகசாலை ஹோமம், 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், நாலாயிரதிவ்ய பிரபந்தம் சேவிக்கப்பட்டு தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு உற்சவர் செந்தாமரைக் கண்ணன், உற்சவர் தேவர் பிரான் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த கருடசேவையில் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரத்திலுள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நவ.16-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.