என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அன்னக்கொடை விழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அன்னக்கொடை விழா](https://media.maalaimalar.com/h-upload/2023/03/07/1845873-srivilliputhur.webp)
X
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அன்னக்கொடை விழா
By
மாலை மலர்7 March 2023 11:26 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- பக்தர்களுக்கு பிரசாதமாக தயிர் சாதம் வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகம் அன்றுஅன்னக்கொடை விழா நடைபெறும். உலகத்தில் உள்ள உயிர்களுக்கு அன்னம் வழங்கும் என்ற ஐதீகத்தில் இந்த விழா நடைபெறும்.
அதேபோல இந்த ஆண்டு அன்னக்கொடை விழா நடந்தது. இதற்காக 50 கிலோ தயிர் சாதம் தயார் செய்யப்பட்டது. ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆண்டாளுக்கு முன்பு தயிர் சாதம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக தயிர் சாதம் வழங்கப்பட்டது.
Next Story
×
X