search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அந்தோணியார் ஆலயத்தில் முட்டிப்போட்டு சென்றும், தீச்சட்டி ஏந்தியும் வினோத வழிபாடு

    • அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.
    • அங்கப்பிரதட்சணம் செய்து பிரார்த்தனை செய்தனர்.

    செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.இங்கு நோய் தீர வேண்டியும், நினைத்த காரியங்கள் வெற்றி பெற வேண்டியும் பல ஆண்டுகளாக ஆங்கிலப்புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வினோத வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று ஆங்கிலப்புத்தாண்டையொட்டி அங்கப்பிரதட்சணம் செய்து பிரார்த்தனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக புனித அந்தோணியார் ஆலயத்திற்கு எதிரே உள்ள குளத்தில், திரளான பக்தர்கள் நீராடினர். பின்னர் அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அந்தோணியார் ஆலயத்திற்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், முட்டிப்போட்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தனர். மேலும் சிலர் தீச்சட்டி ஏந்தி வந்தும் சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×