என் மலர்
வழிபாடு
களியக்காவிளை அருகே புனித மரியன்னை ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது
- அர்ச்சிப்பு விழா இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.
- அர்ச்சிப்பு விழாவை தொடர்ந்து 5 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
களியக்காவிளை அருகே உள்ள அன்னை நகர் பல்லுக்குழியில் புதிதாக புனித மரியன்னை மலங்கரை கத்தோலிக்க ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் மலங்கரை கத்தோலிக்க மறை மாவட்டத்தின் களியக்காவிளை மறை மாவட்டத்திற்கு உட்பட்ட இந்த புதிய ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.
விழாவில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைத்து நன்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். அர்ச்சிப்பு விழாவை தொடர்ந்து 5 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
விழா நாட்களில் முதல் திருவிருந்து வழங்குதல், நற்செய்தி கூட்டம், மறைக்கல்வி மற்றும் பக்த இயக்கங்களின் ஆண்டுவிழா போன்றவை நடைபெறும். 29-ந் தேதி ஆடம்பர ஜெபமாலை பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை அருள்தாஸ், இணை பங்குதந்தை வில்பின் விஜி மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், இறைமக்கள் செய்துள்ளனர்.