என் மலர்
வழிபாடு
காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
- விழா வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது.
- வருகிற 1-ந்தேதி தேர்ப்பவனி நடைபெறும்.
நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசாள் ஆலய திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. விழா வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடைபெறும். நிகழ்ச்சியில் வெட்டுவெந்தி ஆலய அருட்பணியாளர் அந்தோணி முத்து தலைமை தாங்குகிறார். தூய சவேரியார் தாதியர் கல்லூரி அருட்பணியாளர் ஜெயப்பிரகாஷ் மறையுரை நிகழ்த்துகிறார். பின்னர், அன்பியங்களின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 30-ந் தேதி வெள்ளையம்பலம் அருட்பணியாளர் ஜஸ்டின் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பலி நடைபெறும்
.வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின் தலைமையில் திருப்பலி, திருமுழுக்கு மற்றும் முதல் திருவிருந்து வழங்குதல் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். தேர் பவனியானது ஆலயத்தில் இருந்து தொடங்கி காஞ்சாம்புறம், செங்கோடு, கோட்டுவிளை, மாம்பழஞ்சி, நீர்விளாகம், பாலாமடம், நித்திரவிளை வழியாக ஆலயம் வந்தடையும்.
2-ந் தேதி காலை 9 மணிக்கு அருட்பணியாளர் காட்வின் சவுந்தரராஜ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் காட்வின் செல்ல ஜஸ்டஸ் மறையுரையாற்றுகிறார். பகல் 11 மணிக்கு அன்பின்விருந்து நடக்கிறது. மதியம் 2 மணிக்கு இளையோர் இயக்கம் நடத்தும் வினாடி வினா போட்டி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா, கலைநிகழ்சிகள் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருள் சகோதரிகள், பங்கு அருட்பாணியாளர்கள் செய்து வருகின்றனர்.