என் மலர்
வழிபாடு
நெடுவிளை ஊசிக்காட்டு சுடலைமாடசாமி கோவிலில் சித்திரை கொடை விழா நாளை தொடங்குகிறது
- இரவு சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது.
- சுடலை மாட சுவாமி கதை மகுட ஆட்டம் நடக்கிறது.
ஈத்தாமொழி அருகே உள்ள நெடுவிளை ஊசிக்காட்டு சுடலைமாட சாமி கோவிலில் சித்திரை கொடை விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.
நாளை மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவும், இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையும், அதைத்தொடர்ந்து புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் பயின்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்குவதும், முன்னாள் ஊர் பொறுப்பாளர்களை கவுரவிப்பதும் நடைபெறுகிறது. இரவு நடைபெறும் அன்னதானத்தை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.
நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையும், 9.30 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. 26-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஈத்தாமொழி கோம்பேஸ்வரர் கோவில் தீர்த்த இடத்தில் புனித நீர் எடுத்து யானை முன் செல்ல ஊர்வலமாக கோவில் வருவதும், இரவு சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது.
27-ந் தேதி காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமமும், லெட்சுமி ஹோமமும், இரவு 9 மணிக்கு குருசாமி கதை மகுட ஆட்டமும், 11.30 மணிக்கு தீபாராதனையும், 12 மணிக்கு ஊசிக்காட்டு சுடலை மாட சுவாமி கதை மகுட ஆட்டமும், நள்ளிரவு 1 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
28-ந் தேதி காலை 11.30 மணிக்கு கால சாமிக்கு பூஜையும், மதியம் 1.30 மணிக்கு ஊசி காட்டு சுடலை மாட சுவாமிக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும், 2.30 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்கு அரிச்சந்திரா கதை மகுட ஆட்டமும், நள்ளிரவு 1 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. 29-ந் தேதி காலை 10 மணிக்கு பலவேசக்கார சுவாமிக்கு பூஜையும், 6 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.
கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் ஆர். ஜோதிலிங்கம், செயலாளர் எல்.வேல்செல்வன், பொருளாளர் எஸ்.குமரேசன், துணைத் தலைவர் சி.அய்யப்பன், துணைச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், ஆலோசகர் என்.எம்.வெற்றிசெல்வன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.