search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

    • சூலக்கல் மாரியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • சூலக்கல் மாரியம்மன் சந்தனம் மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து சுயம்புவாக உள்ள சூலக்கல் மாரியம்மனுக்கு பன்னீர், சந்தனம், பால், எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் சூலக்கல் மாரியம்மன் சந்தனம் மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவை, பொள்ளாச்சி கிணத்துக்கடவு மற்றும் கேரளா மாநில பகுதியில் உள்ள பக்தர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று சூலக்கல் மாரியம்மனை தரிசனம் செய்து சென்றனர்.முன்னதாக மதியம் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சுந்தரராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல் கிணத்துக்கடவு பஸ் நிலையம் எதிரே உள்ள கரிய காளியம்மன் கோவிலிலும் காளியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் கிணத்துகடவு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கரியகாளியம்மனை தரிசனம் செய்தனர்.

    இதேபோல் கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் சிவலோக நாயகி கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றது. இதேபோல் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் பொள்ளாச்சி வட்டாரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×