என் மலர்
வழிபாடு
கும்பாபிஷேகத்துக்கு தயாராகும் சோழீஸ்வரர் கோவில்: திருப்பணிகள் தீவிரம்
- இங்கு கடந்த 1971-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
- கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் சோழீஸ்வரர் கோவில் உள்ளது. புராண முக்கியத்துவம் மிக்க இந்த கோவில் காவிரிக்கரையில் உள்ள பரிகார தலங்களுள் ஒன்றாக இருக்கிறது. இங்கு கடந்த 1971-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற இருக்கிறது.
இதை முன்னிட்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருப்பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்து, கோவில் கும்பாபிஷேகத்துக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. மீதம் உள்ள பணிகளையும் தீவிரப்படுத்தி துரிதமாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பல லட்சம் ரூபாய் செலவில் கோவில் புதுப்பிக்கப்பட்டு, புது வண்ணத்தில் காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. காவிரிக்கரை சோழீஸ்வரரை தரிசிப்பது காசியில் தரிசனம் பெறுவது போன்றதாகும் என்று பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.