என் மலர்
வழிபாடு
திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு: டன் கணக்கில் பூ, பழங்களால் அலங்காரம்
- 19-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெறுகிறது.
- இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் வரும் 19-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் வெளிப்புறம் முழுவதும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தசரா குழுவினரால் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல டன் எடையுள்ள பல வகையான மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு வியக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நேற்று இரவு 12.5 மணியளவில் கோவில் திறக்கப்பட்டு பாசுரங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர் அச்சகர்கள் 12.25 மணி அளவில் பூஜைகள் செய்து ஆர்த்தி எடுத்தனர்.
தோமாலையுடன் கருவறை கதவு திறக்கப்பட்டு மூலவருக்கு அர்ச்சனைகள் நடந்தது. வழக்கமான பூஜைகள் நடந்தன. இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முடிந்த பிறகு சாதாரண பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.