search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அமாவாசையை பவுர்ணமியாக்கிய அபிராமி அம்மன்
    X

    அமாவாசையை பவுர்ணமியாக்கிய அபிராமி அம்மன்

    • திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
    • அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அபிராமி அம்மன் தனது பக்தர் அபிராமி பட்டரின் பக்திக்கு இணங்க தை அமாவாசை நாளை அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். விழாவில் அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னர் தை அமாவாசை நாளில் பூம்புகார் சென்று கடலில் நீராடி விட்டு திருக்கடையூர் அமர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அப்போது மன்னரின் வருகையை கவனிக்காமல் சுப்பிரமணிய பட்டர் தியான நிலையில் இருந்தார். இதைக்கண்ட மன்னர் பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பி பட்டரே இன்று என்ன திதி என்று கேட்டார். அப்போது அபிராமி அம்மனின் தியான நிலையில் இருந்த சுப்பிரமணிய பட்டர் வாய் தவறி தை பவுர்ணமி எனக் கூறினார்.

    அமாவாசை நாளை பவுர்ணமி என தவறாக கூறியதால் அச்சமடைந்த சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனை நோக்கி வேண்டி அந்தாதி பாடல்களைப் பாட தொடங்கினார். அப்போது அபிராமி அம்மன் பட்டருக்கு நேரில் தோன்றி தனது காதில் அணிந்துந்திருந்த தோடு ஒன்றை கழற்றி வானில் வீசினார். அது முழு நிலவாக வானில் ஒளி வீசி அமாவாசையை பவுர்ணமியாக மாற்றி காட்சியளித்தது. இந்த அரிய நிகழ்வை தொடர்ந்து சுப்பிரமணிய பட்டர் அபிராமி பட்டர் என சிறப்போடு அழைக்கப்பட்டார்.

    Next Story
    ×