என் மலர்
வழிபாடு
திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலுக்கு ரூ.2.26 கோடியில் புதிய தேர்
- இந்த கோவில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
- தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
சென்னை, திருவான்மியூரில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த மருந்தீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது 63 நாயன்மார்களால் பாடல் பெற்ற சிறப்பு பெற்றதாகும். இக்கோவிலின் சுவாமி மற்றும் அம்மன் வீதிஉலா வருவதற்காக புதிய தேர் செய்திட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வழங்கிய அறிவுரையின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய அனுமதிகள் பெறப்பட்டன.
அதைத் தொடர்ந்து, உபயதாரர் எஸ்.ராஜப்பன் ரூ.2.26 கோடி மதிப்பீட்டில் புதிய தேரை செய்து வழங்கினார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலுக்கு நேற்று சென்று புதிய தேரை பார்வையிட்டார். அப்போது, புதிய தேரை பாதுகாத்திடும் வகையில் கொட்டகை அமைப்பதற்கும், கோவில் முன்புறம் உள்ள காலியிடத்தினை சுத்தம் செய்து சுற்றுச்சுவர் அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அவர் அறிவுரைகள் வழங்கினார்.