search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இந்த வார விசேஷங்கள் (25.2.2025 முதல் 3.3.2025 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (25.2.2025 முதல் 3.3.2025 வரை)

    • 26-ந்தேதி மகா சிவராத்திரி.
    • 27-ந்தேதி அமாவாசை.

    25-ந்தேதி (செவ்வாய்)

    * பிரதோஷம்.

    * ராமேஸ்வரம் சுவாமி, அம்பாள் மின்விளக்கு அலங்கார வெள்ளி ரதத்தில் பவனி.

    |* கோயம்புத்தூர் கோணியம்மன் விழா தொடக்கம்.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    26-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * மகா சிவராத்திரி.

    * திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர் தலங்களில் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி.

    * திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் தரிசனம்,

    * மேல்நோக்கு நாள்.

    27-ந்தேதி (வியாழன்)

    * அமாவாசை.

    * கோயம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகன சேவை.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் தலங்களில் தெப்ப உற்சவம்.

    * சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    28-ந்தேதி (வெள்ளி)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர் தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    * மேல்நோக்கு நாள்.

    1-ந்தேதி (சனி)

    * கோயம்புத்தூர் கோணியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.

    * வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் தலங் களில் அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    2-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * மதுரை கூடலழகர் விழா தொடக்கம்.

    * திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    3-ந்தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * சதுர்த்தி விரதம்.

    * வென்னிமலை சுப்பிரமணியர் கோவிலில் மாசி உற்சவம் ஆரம்பம்.

    * மதுரை கூடலழகர் காலை தங்கச் சிவிகையில் மச்ச அவதாரம். இரவு சிம்ம வாகனத் தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    Next Story
    ×