search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கபிலத்தீர்த்தம் லட்சுமிநரசிம்மர் கோவில் மகா கும்பாபிஷேகம் 14-ந்தேதி நடக்கிறது
    X

    திருப்பதி கபிலத்தீர்த்தம் லட்சுமிநரசிம்மர் கோவில் மகா கும்பாபிஷேகம் 14-ந்தேதி நடக்கிறது

    • கும்பாபிஷேக விழா இன்று தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது.
    • நாளை சிறப்பு ஹோமம் நடக்கிறது.

    திருப்பதி கபிலதீர்த்தத்தில் உள்ள லட்சுமிநரசிம்மர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி இன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ஆச்சார்யாவரணம், புண்யாஹவச்சனம், மிருத்யுங்கிரஹணம், அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை புண்யாஹவச்சனம், பஞ்சகவ்யப்ராசனம், வாஸ்து ஹோமம், அகல்மாஷ பிராயச்சித்த ஹோமம், ரக்ஷாபந்தனம், மாலை அக்னி பிரதிஷ்டை, கும்ப ஸ்தாபனம், கும்பராதனை, சிறப்பு ஹோமம் நடக்கிறது.

    நாைள மறுநாள் (சனிக்கிழமை) காலை யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள், பஞ்சகதீவாசம், ஷீராதிவாசம், ஜலாதிவாசம், ரத்னந்யாசம், பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், மாலை பிம்பவஸ்து, நவ கலச சதுர்தச கலச ஸ்நாபனம், மகாசாந்தி, திருமஞ்சனம், பூர்ணாஹுதி, சயனாதிவாசம் நடக்கிறது.

    14-ந்தேதி காலை 9 மணியில் இருந்து காலை 10 மணிக்குள் மிதுன லக்னத்தில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா அபிஷேகம் நடக்கிறது. அதன் பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    Next Story
    ×