என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் கருட சேவை: திரளான பக்தர்கள் தரிசனம் திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் கருட சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்](https://media.maalaimalar.com/h-upload/2023/04/28/1873175-veeraraghava-perumal-temple.webp)
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் கருட சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- 2-ந் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது.
- 4-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீரராகவ பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோபுர தரிசனம் நடைபெற்றது.
கோபுர தரிசனத்தை காண சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டு வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து 5.30 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 7-ம் நாளான வருகிற 2-ந் தேதி காலை தேர் திருவிழாவும், 4-ந் தேதி காலை கோவில் குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.