search icon
என் மலர்tooltip icon

    எத்தியோப்பியா

    • எத்தியோப்பியாவில் பெய்த கனமழையால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது.
    • இதில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    அடிஸ் அபாபா:

    தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

    மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது. காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை 500-ஐ கடக்கலாம் என ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    • எத்தியோப்பியாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது.
    • இதில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    அடிஸ் அபாபா:

    தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

    தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதுவரை 5க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

    மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10 அடி உயர குச்சிகளில் பழங்குடியின மக்கள் நடந்து செல்லும் ஒரு வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
    • 'முன்னெச்சரிக்கை' என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோவை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

    சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில வீடியோக்கள் பயனர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அந்த வகையில், 10 அடி உயர குச்சிகளில் பழங்குடியின மக்கள் நடந்து செல்லும் ஒரு வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

    எத்தியோப்பியாவில் வசிக்கும் பன்னா என்ற பழங்குடியின மக்கள் இந்த சவாலான திறமையை தங்கள் அன்றாட வாழ்க்கையில் தடையின்றி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பழக்கமானது வரலாற்று ரீதியாக ஆன்மீக நோக்கங்களுக்காக நடைபெற்று வருகிறது.

    நச்சு பாம்புகளிடம் இருந்து தங்களை காத்து கொள்ள பன்னா பழங்குடியினரால் எடுக்கப்பட்ட 'முன்னெச்சரிக்கை' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். வெறும் நடைபயணத்துக்கு அப்பால், பன்னா மக்கள் ஸ்டில்ட் நடை பயணத்தை ஒரு கலை வடிவமாகவே உயர்த்தி உள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • மோதல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அவசரகால நிலை பிரகடனம் செய்து அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
    • பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எத்தியோப்பியாவில் 2-வது பெரிய பிராந்தியமான அம்ஹாராவில் ராணுவத்துக்கும், உள்ளூர் பானோ போராளிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

    இந்த மோதல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அவசரகால நிலை பிரகடனம் செய்து அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோதலை கட்டுப்படுத்துவது கடினமாகி விட்டதால் அவசர நிலையை பிரகடனப்படுத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளது.

    பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரண்ட் இன்றி கைது செய்யும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 464 மனுக்கள் பெறப்பட்டது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 464 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து வருவாய் துறை சார்பில் திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த மூன்று பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும், பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டு புழு வளர்ப்பு தொடர்ந்து சிறந்த முறையில் வளர்த்து வரும் பட்டு விவசாயிகளுக்கு மாநிலத் திட்டத்தின் மூலம் சிறந்த பட்டு விவசாயிகளுக்கான 3 நபர்களுக்கு ரொக்க பரிசுகளும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான அகவை முதிர்ந்த 2 தமிழறிஞர்களுக்கும், தமிழில் சிறந்த வரைவு குறிப்பு எழுதிய 3 அரசு பணியாளர்களுக்கும் பரிசு தொகைக்காண காசோலைகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்களும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசு தொகைக்கான காசோலை சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்பிரதீப் கண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்சபீர் பானு, பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் தீபா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×