என் மலர்
ஜெர்மனி
- ஜெர்மனியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கார் பாய்ந்தது.
- இந்தச் சம்பவத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
முனீச்:
ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள முனீச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடக்கிறது. இதற்காக உலக தலைவர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், முனீச்சில் கூட்டத்தில் வேகமாக புகுந்த கார் மோதியதில் 28 பேர் படுகாயம் அடைந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது பாய்ந்தது. இந்தச் சம்பவத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்த போலீசார் கார் ஓட்டி வந்த 24 வயது நபரை கைதுசெய்தனர். விசாரணையில், அவர் ஆப்கனைச் சேர்ந்த அகதி என தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, சர்வதேச மாநாடு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது.
- இந்த தாக்குதலில் குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர்.
பெர்லின்:
ஜெர்மனியின் பவாரியா மாநிலத்தில் அமைந்துள்ள அஷாபன்பர்க் நகரில் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் ஒரு குழந்தை, ஒரு பெரியவர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 11.45 மணிக்கு நடைபெற்றது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடந்த இடத்தில் ஒருவரை கைதுசெய்த போலீசார், வேறு யாருக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தினர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதலில் குழந்தை உள்பட 2 பேர் பலியானது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- AFD- ஜெர்மனிக்கான தீவர வலதுசாரி மாற்றால் மட்டும்தான் ஜெர்மனியை காப்பாற்ற முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
- எலான் மஸ்க் அவரது கருத்தை கூற சுதந்திரம் உள்ளது. ஆனால் பகிர்ந்து கொள்ள அவசியமில்லை.
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் உதவி புரிந்தார். வெளிப்படையாக பிரசாரத்தில் ஈடுபட்டதுடன் மில்லியன் கணக்கில் தேர்தல் நிதி அளித்தார். இதனால் டொனால்டு டிரம்ப் அவரை முக்கிய பொறுப்பில் நியமித்துள்ளார்.
இந்த நிலையில் ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறார் என ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளார்.
எலான் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் "AFD- ஜெர்மனிக்கான தீவர வலதுசாரி மாற்றால் மட்டும்தான் ஜெர்மனியை காப்பாற்ற முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார். ஜெர்மனி செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பை மேற்கொள்காட்டி தனது கருத்தை இரட்டிப்பாக்கினார்.
இந்த நிலையில் ஜெர்மன் அரசு செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் "இதன் உண்மை என்னவெனில், எலான் மஸ்க் பாராளுமன்ற தேர்தலில் ஆதிககம் செலுத்த முயற்சி செய்தி கொண்டிருக்கிறார். ஜெர்மனியில் தேர்தல் வாக்காளர்கள் வாக்குப்பெட்டியில் செலுத்தும் வாக்குகளால் முடிவு செய்யப்படுகிறது. ஜெர்மனி நாட்டின் தேர்தல் ஜெர்மன் விவகாரத்தைச் சேர்ந்தது. எலான் மஸ்க் அவரது கருத்தை கூற சுதந்திரம் உள்ளது. ஆனால் பகிர்ந்து கொள்ள அவசியமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி கடந்த மாதம் ஒலாஃப் ஸ்கால்ஸின் அரசு வாக்கெடுப்பில் கவிழ்ந்தது. இதனால் அடுத்த வருடம் பிப்ரவரி 23-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
- ஜெர்மன் நாட்டு சட்டப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
- சவூதி அரேபிய மருத்துவர் கண்மூடித்தனமாக கார் ஓட்டி 5 பேரை கொன்றார்.
ஜெர்மன் பாராளுமன்றத்தை அந்நாட்டின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்றைய தினம் கலைத்து உத்தரவிட்டார்.
சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் சான்சலர் ஸ்கால்ஸ் தோல்வி அடைந்தார். அரசு பெரும்பான்மையை இழந்ததை அடுத்து முன்கூட்டியே தேர்தலை நடத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். அதன்படி தேர்தல் தேதியை ஜனாதிபதி நேற்று அரசை கலைத்து அடுத்த தேர்தல் தேதியை நேற்று அறிவித்துள்ளார்.
ஜெர்மன் நாட்டு சட்டப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே அடுத்த பிப்ரவரி 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி அறிவித்தார்.

மேலும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், தேர்தல் பிரச்சாரம் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக ஜெர்மனி உள்ள நிலையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக கிழக்கு நகரமான மாக்டேபர்க்கில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, 50 வயதான சவூதி அரேபிய மருத்துவர் தலேப் அல்-அப்துல்மோசென் என்பவர் கண்மூடித்தனமாக கார் ஓட்டி 5 பேரை கொன்றார். இதில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அந்நாட்டு அரசியலிலும் எதிரொலித்து வருகிறது.
- விபத்து ஏற்படுத்திய நபர் சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டர் என தெரிய வந்தது.
- அந்த நபர் அகதியாக வந்தவர் என கடந்த 2016-ம் ஆண்டு ஜூலையில் அறியப்பட்டவர்.
ஜெர்மனியில் மக்திபர்க் நகரின் மையப்பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சந்தை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சந்தையில் கடந்த 20-ந்தேதி இரவு குவிந்த மக்கள், பண்டிகைக்கு தேவையான கேக், பரிசுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது, கார் ஒன்று அசுர வேகமாகத்தில் வந்து கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் மக்கள் அலறியடித்தபடி ஓடினர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 15 பேர் படுகாயமடைந்து உள்ளனர். 37 பேருக்கு மித அளவிலான காயமும், 16 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களில் குழந்தை ஒன்றும் அடங்கும்.

விபத்து ஏற்படுத்திய நபர் சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபர் அகதியாக வந்தவர் என கடந்த 2016-ம் ஆண்டு ஜூலையில் அறியப்பட்டவர். ஜெர்மனியில் வசிப்பதற்கான அனுமதியை பெற்றிருக்கிறார்.
இந்த சம்பவத்தில், இந்தியர்கள் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 3 இந்தியர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 4 பேரும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதனை பெர்லின் நகரில் உள்ள இந்திய தூதரகம், அதனுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளது.
அவர்களுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், தேவையான ஆதரவையும் வழங்கி வருகிறது. அவர்களுடைய குடும்பத்தினருடனும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
- கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
- வேகமாக காரை ஓட்டி வந்த மர்ம நபர் அங்கிருந்த மக்கள் மீது இடித்து தாக்குதல் நடத்தினார்.
பெர்லின்:
ஜெர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மக்டேபர்க் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் அதிகமாக கூடியிருந்த கூட்டத்திற்குள் மர்ம நபர் ஒருவர் வேகமாக காரை ஓட்டி வந்தார். அங்கிருந்த மக்கள் மீது இடித்து தாக்குதல் நடத்தினார்.
இதில் பொதுமக்களில் 2 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என முதல் கட்ட தகவல் வெளியானது.
கார் தாக்குதலை அடுத்து மார்க்கெட் பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. பாதுகாப்புப் படையினர் அப்பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து விசாரணை நடந்துவருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் கூட்டத்துக்குள் கார் புகுந்து தாக்குதல் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நம்பிக்கை வாக்கெடுப்பனது வரும் பிப்ரவரியில் விரைவான தேர்தலுக்கு வழி வகுத்துள்ளது.
- 394 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் கூட்டணி அரசாங்கம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பனது வரும் பிப்ரவரியில் விரைவான தேர்தலுக்கு வழி வகுத்துள்ளது.

394 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தனர். அரசாங்கத்திற்கு ஆதரவாக 207 பேர் வாக்களித்தனர்.
பட்ஜெட் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து ஷோல்ஸுடனான கூட்டணி அரசாங்கத்திலிருந்து சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) வெளியேறிய பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் மாளவிகா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
சார்புரூக்கன்:
ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவல் உடன் மோதினர்.
இதில் அபாரமாக ஆடிய மாளவிகா 23-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மாளவிகா மற்றொரு டென்மார்க் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
சார்புரூக்கன்:
ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, பிரான்சின் கிறிஸ்டோ பாபோவ் உடன் மோதினர்.
இதில்ஆயுஷ் ஷெட்டி 17-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
- ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, மாளவிகா அரையிறுதிக்கு முன்னேறினர்.
சார்புரூக்கன்:
ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, பின்லாந்தின் கல்லே கோல்ஜோனென் மோதினர்.
இதில்ஆயுஷ் ஷெட்டி 21-18, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி மொத்தம் 41 நிமிடம் நீடித்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், வியட்நாமின் துய் லின் குயென் மோதினர்.
இதில் அபாரமாக ஆடிய மாளவிகா 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- பிராங்பர்ட், ஹம்பர்க், முனிச் ஆகியவற்றில் உள்ள தூதரகங்களை மூட ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது.
- பெர்லின் நகரில் மட்டும் இயங்கும் என அறிவிப்பு
ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஜாம்ஸித் ஷர்மாத்திற்கு திங்கிட்கிழமை ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றியது. இதனால் ஜெர்மனியில் உள்ள மூன்று தூதரகங்களை உடனடியாக மூடுமாறு ஈரானுக்கு ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது.
69 வயதாகும் ஷர்மத் அமெரிக்காவில் வசித்து வந்தார். துபாய்க்கு கடந்த 2020-ம் ஆண்டு சென்றபோது ஈரான் பாதுகாப்புப்படையினரால் கடத்தப்பட்டார்.
2023-ம் ஆண்டில் இருந்து நடைபெற்ற விசாரணையின் ஜெர்மனி அமெரிக்கா, சர்வதேச உரிமைகள் குழுக்களின் வாதங்கள் பொய்யானவை என நீதிமன்றத்தால் புறக்கணிப்பட்டது. அதன் அடிப்படையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.
பிராங்பர்ட், ஹம்பர்க், முனிச் ஆகியவற்றில் உள்ள தூதரகங்களை மூட ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது. பெர்லின் நகரில் மட்டும் இயங்கும் எனத் தெரிவித்துள்ளது.
- கடையின் மேலாளரை அவரது வீட்டிற்கு சென்று போலீசார் கைது செய்துள்ளனர்.
- தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் போதைப்பொருளை விநியோகிக்கும் கும்பலை கைது செய்துள்ளது.
மேற்கு ஜெர்மனியில் உள்ள பீட்சா கடையில் ஒரு குறிப்பிட்ட பீட்சாவை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டிய சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் அதிர வைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
"நம்பர் 40" என்று குறிப்பிட்ட பீட்சாவை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதாக வெளியான தகவலை தொடர்ந்து போலீசார் ரகசியமாக அந்த கடையை கண்காணித்தனர். அப்போது பீட்சாவுடன் சைட் டிஷ்ஷாக கொக்கைன் என்னும் போதைப்பொருளும் வழங்கப்பட்டதே மக்கள் அதன் மீது ஆர்வம் காட்டியதற்கு காரணம் என தெரியவந்தது.
இதையடுத்து கடையின் மேலாளரை அவரது வீட்டிற்கு சென்று போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் வீட்டில் இருந்து 268,000 யூரோ ரொக்கம், 1.6 கிலோ கொக்கெய்ன் மற்றும் 400 கிராம் கஞ்சா உட்பட பெருமளவிலான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து விசாரணைக்குப் பின் கடை மேலாளாரை போலீசார் விடுத்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையை செய்து வந்துள்ளார். அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் போதைப்பொருளை விநியோகிக்கும் கும்பலை கைது செய்துள்ளது.