என் மலர்
லைஃப்ஸ்டைல்
X
வாயு தொல்லையை குணமாக்கும் பூண்டு சட்னி
Byமாலை மலர்4 Dec 2017 9:12 AM IST (Updated: 4 Dec 2017 9:12 AM IST)
வாயு தொல்லை உள்ளவர்கள் அடிக்கடி இந்த பூண்டு சட்டியை செய்து சாப்பிடலாம். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பூண்டுப் பல் - ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - தேவைக்கேற்ப,
புளி - எலுமிச்சை அளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
கடாயில் கொஞ்சம் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதனுடன் புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும்.
நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.
பின்னர் மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
இதை இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
X