என் மலர்
லைஃப்ஸ்டைல்
X
ஆண், பெண் குழந்தைகளுக்கான தீபாவளி சிறப்பு ஆடைகள்...
Byமாலை மலர்22 Oct 2019 8:27 AM IST (Updated: 22 Oct 2019 8:27 AM IST)
இந்த தீபாவளிக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கான ஆடைகளில் பல புதிய வகைகள் அறிமுகமாகியுள்ளன.
தீபாவளிக்கென்று புதுவகையான பட்டாசுகள், தின்பண்டங்கள், புது வகையான ஆடைகள் என அனைத்துமே சிறப்பாக இருப்பதையே அனைவரும் விரும்புவோம். இந்த தீபாவளிக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கான ஆடைகளில் பல புதிய வகைகள் அறிமுகமாகியுள்ளன.
ஆண் குழந்தைகளுக்கான புதுவகை ஆடைகள்
* பிரிண்ட் செய்யப்பட்ட குர்தாக்கள், சைனீஸ் காலருடன் பக்கவாட்டில் பொத்தான்கள் வைத்து வந்திருப்பது புதிய வரவாகும். இக்கத் வகைகளில் குர்தாவானது இருக்க கீழே அணிவது பேன்ட், கெளல் டோத்தி அல்லது டோத்தி சல்வார் என சுடிதார் பேன்ட் அல்லது பைஜாமாக்களுக்கு மாற்றாக வந்திருப்பது புதுவிதமாக உள்ளது.
* நேரு ஜாக்கெட், மோடி ஜாக்கெட்டுகளுடன் குர்தாக்களை அணிவதும் இப்பொழுது பிரபலமாக உள்ளது. அந்த ஜாக்கெட்டுகளில் பிரிண்ட்டுகள் செய்யப்பட்டு அவை டயகனல் திறப்புகளோடு வந்திருப்பது புதுமை. கீழே அணியும் பேன்ட்டானது பிளெயின் வண்ணத்தில் இருக்க, குர்தா மற்றொரு பிளெயின் வண்ணத்தில் இருக்க, அதற்கு மேலே அணியும் ஜாக்கெட்டானது ப்ரோகேட் மற்றும் எம்பிராய்டரி, பிரிண்ட்டுகளில் வந்திருப்பது அருமையாக உள்ளது.
* இந்திய - மேற்கத்திய பாணியில் வந்திருக்கும் ஷெர்வானிகள் மிகவும் பிரபலம். அதிலும் பட்டில் வரும் அச்கன் ஜாக்கெட், ப்ரோகேட் அல்லது லக்னோ எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஷெர்வானிகளே இன்றைய சமகாலத்திய பாணியுடன் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றதாக உள்ளது.
* லினென் குர்தா பைஜாமா, காட்டன் சில்க் பைஜாமா மற்றும் டிசைனர் குர்தா பைஜாமா போன்றவை சிறு சிறு மாற்றங்களுடன் தீபாவளிக்கு புது வரவாக வந்துள்ளன. ஆறு மாத ஆண் குழந்தையிலிருந்து பத்து வயதுக் குழந்தைகள் வரை இவ்வகை ஆடைகள் பல்வேறு வடிவமைப்பு மற்றும் வண்ணங் களில் அழகழகாய் வந்துள்ளன.
* பிளெயின் ஆர்ட் ட்யூபியன் சில்க் குர்தா செட், வோவன் காட்டன் ஜக்கார்ட் குர்தா செட், பிளெயின் மட்கா சில்க் குர்தா டோத்தி செட், எம்பிராய்டர்ட் ட்யூபியன் சில்க் ஷெர்வானி, சன்கனேரி பிரிண்டட் காட்டன் குர்தா பைஜாமா, பாலி காட்டன் குர்தா பைஜாமா, கை எம்பிராய்டரி குர்தா செட், பஹல்பூரி சில்க் குர்தா செட், காம்போ ஆர்ட் சில்க் ஷெர்வானி செட், சாலிட் காலர் காட்டன் ஏசிமெட்ரிக் குர்தா, ரேயான் குர்தா, பிரிண்டட் கோட்டா சில்க் குர்தா, பிளெயின் காட்டன் பைதானி சூட் என எத்தனையோ புதுப்புது வகைகள் ஆண் குழந்தைகள் அணிந்து கொள்ளக்கூடிய வகையில் அதிரடியாய் வந்துள்ளன.
பெண் குழந்தைகளுக்காக தீபாவளிக்கு அணிந்து கொள்ளக்கூடிய புதுவரவு ஆடைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
பெண் குழந்தைகளுக்கான புதுவகை ஆடைகள்
* அதிக ப்ளட்டுகளுடன் வரும் லெஹங்காக்கள், வயிறு வரை அணியும் சோளிகள் அல்லது இந்திய மேற்கத்திய பாணியில் வரும் டாப்புகளுடன் அணிவது இப்பொழுது பிரபலமாய் உள்ளது.
* இந்திய மேற்கத்திய பாணியில் வந்திருக்கும் சல்வார் சூட்டுகள் அதாவது பளாஸோ பேன்ட்டுகள், மேலே கையில்லாத சிறிய டாப், அதன் மேல் அணிந்து கொள்ளக்கூடிய நீளமான அங்கி இவை குழந்தைகள் அணிந்து பார்க்கும் பொழுது நாகரீகமான தோற்றத்தைத் தரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. டோத்தி ஸ்டைல், கெளன்கள், ஜாக்கெட்டுடன் வரும் சல்வால் கமீஸ், க்ராப் டாப் மற்றும் பளாஸோ என்று வரிசையாகச் சொல்லி கொண்டே போகலாம்.
* கவுன்களில் இத்தனை விதமா? என்று வாயைப் பிளக்க வைக்கின்ற வகையில் எத்தனையோ மாடல்களில் அழகழகாய் வந்துள்ளன. நீண்ட கவுன்கள் கைகளில் ஹேண்ட் ஹோல் மாடல், கழுத்தில் நீள்வட்ட வடிவில் ஹோல்களுடன் வந்திருப்பவை குழந்தைகள் அணியும் பொழுது கொள்ளை அழகாக இருக்கும்.
* முழங்கால் வரை நீண்டிருக்கும் குட்டை ப்ராக்குகளுக்கு போட் நெக் வைத்து, குட்டைக்கை மற்றும் இடுப்பில் பெல்ட்டானது இருக்க அதன் மேல் பெரிய ஷேட்டின் பூக்கள் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதும் குட்டிப் பெண்களின் அட்டகாசமான தேர்வாக இருக்கும்.
* ஒரே கவுனில் இரண்டு மூன்று லேயர்கள் வருவதும் இப்பொழுது பெண் குழந்தைகள் அணியக்கூடிய புது வரவு என்றே சொல்லலாம். லைனிங் வைத்த கவுன்கள், எம்பிராய்டரி செய்யப்பட்ட கவுன்கள், கிளிட்டரிங் (ஒளிவிழும்) கெளன்கள், செல்ப் டிசைன் கவுன்கள் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
* இந்திய மேற்கத்திய பாணியில் வந்திருக்கும் லெஹங்கா சோளிகளும் புது வரவே.
* பனாரஸ் துணிகளில் லாங் ப்ராக்குகள், சுடிதார்கள் மற்றும் லெஹங்காக்களும் பெண் குழந்தைகளைக் கவரும் விதமாக வந்துள்ளன.
* டிசைனர் சல்வார் சூட்டுகள், பட்டுப் பாவாடை செட்டுகளுடனேயே அவற்றிற்கு அணிந்து கொள்ளக்கூடிய வளையல், நெக்லஸ், பொட்டு மற்றும் கொலுசும் இந்த தீபாவளிக்குப் புதுவரவாக உள்ளது.
* பிறந்த குழந்தைகளுக்கு அழகழகான வண்ணங்களில் சில்க் துணியில் ப்ராக்குகள். அத்துடனேயே சிறிய பெட்டியில் நலங்கு மாவு, கஸ்தூரி மஞ்சள், பால் பாசி மணி, காலில் போடும் தண்டை, வசம்பு, கருப்பு வெள்ளை கை வளையல்கள் மற்றும் கண் மை இவை அனைத்தும் சேர்ந்து ஒரு செட்டாக வந்திருக்கிறது. இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த செட்டுடனேயே பாலாடையும் வருவதாகும்.

Next Story
×
X