search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    நுரையீரலைப் பலப்படுத்தும் பஸ்திரிகா பிராணாயாமம்
    X

    நுரையீரலைப் பலப்படுத்தும் பஸ்திரிகா பிராணாயாமம்

    • எந்த வகைப் பிராணாயாமம் செய்வதானாலும் உடலை வருத்தி செய்யக் கூடாது.
    • தீவிர கண் பிரச்சினை உள்ளவர்கள் இப்பிராணாயாமத்தைத் தவிர்க்க வேண்டும்

    நுரையீரலைப் பலப்படுத்தும் மேலும் ஒரு அருமையான மூச்சுப் பயிற்சி பஸ்திரிகா பிராணாயாமம் ஆகும்.

    பலன்கள்

    சுவாச மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது

    சளியை வெளியேற்றுகிறது

    சீரண மண்டலத்தின் இயக்கத்தைத் தூண்டுகிறது

    வயிற்றுத் தசைகளை உறுதியாக்குகிறது

    உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது

    உடலில் பிராண ஓட்டத்தை சீராக்குகிறது

    மனதை அமைதிப்படுத்துகிறது

    செய்முறை

    பதுமாசனம் உள்ளிட்ட தியான ஆசனங்களில் ஒன்றில் அமர்ந்து கொள்ளவும். மூச்சை ஆழமாக உள்ளிழுத்து இரண்டு நாசிகள் வழியாக வேகமாக வெளியேற்றவும். அதே வேகத்தில் மூச்சை உள்ளிழுத்து மீண்டும் வேகமாக மூச்சை வெளியேற்றவும்.

    ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கும் போதும் வயிறு விரிந்து மூச்சை வெளிவிடும் போது வயிறு சுருங்க வேண்டும். இவ்வாறு 10 முறை தொடர்ந்து செய்யவும். இது ஒரு சுற்று. இவ்வாறு 3 சுற்றுகள் செய்யவும்.

    பஸ்திரிகா பிராணாயாமம் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இப்பிராணாயமத்தை மெதுவாகச் செய்தாலும் துணைப்பரிவு நரம்பு மண்டலம் (parasympathetic nervous system) தூண்டப்பட்டு அதன் மூலம் தன்னியக்க நரம்பு மண்டலத்தின் (autonomic nervous system) செயல்பாடு மேம்படுவதாகத் தெரிகிறது.

    குறிப்பு: உயர் இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, முதுகுத்தண்டு கோளாறுகள், குடல் பிரச்சினைகள் உள்ளவர்கள் பஸ்திரிகா பிராணாயாமம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தீவிர கண் பிரச்சினை உள்ளவர்களும் இப்பிராணாயாமத்தைத் தவிர்க்க வேண்டும்.

    எந்த வகைப் பிராணாயாமம் செய்வதானாலும் உடலை வருத்தி செய்யக் கூடாது. உடல்ரீதியான பிரச்சினை இருப்பின், தக்க யோகா நிபுணரின் மேற்பாற்வையில் பயில்வது நலம்.

    Next Story
    ×