என் மலர்
உடற்பயிற்சி
அமைதி பிராமரி பிராணாயாமமும்... பலன்களும்...
- இந்த பயிற்சி செய்யும் போது வயிறு காலியாக இருப்பது அவசியம்.
- நீங்கள் பழகும் போது மன அழுத்தம் குறைவதை உணருவீர்கள்.
பிராமரி பிராணாயாமத்தை மேலும் சில வகைகளிலும் செய்யலாம். இன்று நாம் இரண்டாவது வகையான அமைதியான பிராமரி பிராணாயாமம் செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை
விரிப்பில் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகு நேராக இருப்பதை உறுதி செய்யவும். நிதானமாக இரண்டு அல்லது மூன்று முறை சாதாரணமாக மூச்சு விடவும்.
பின் மூச்சை ஆழமாக இழுக்கவும். மூச்சை வெளியேற்றும் போது, 'ம்ம்ம்' என்று வாயை திறக்காமல் குரல் ஒலிக்கவும். உங்கள் தொண்டையில் அதிர்வுகளை உணரவும். இது நேற்று பார்த்த அடிப்படை பிராமரி பிராணாயாமம்.
அடிப்படை பிராணாயாமத்தை ஆறு முறை செய்யவும். பின், மூச்சை இழுத்து விடும் போது, ஒலி எழுப்பாமல், மனதுக்குள் ஒலி எழுப்பி, தொண்டையில் அதிர்வுகளை உணரவும். ஆறு முறை இவ்வாறு செய்யவும்.
துவக்கத்தில் மனதுள் ஒலி எழுப்பும் போது தொண்டையில் அதிர்வுகளை உணர முடியாமல் இருக்கலாம். ஆனால், மனதில் நீங்கள் ஒலி எழுப்பும் போது தொண்டையில் உணர முடிவதாக எண்ணி பயிலும் போது, நாளடைவில் இது சாத்தியப்படும்.
அமைதி பிராமரி பிராணாயாமம் செய்வதால் அடிப்படை பிராமரி பிராணாயாமம் செய்வதன் பலன்கள் கிடைப்பதோடு மனம் ஒருநிலைப்படவும் உதவுகிறது. மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் பொது இடமாக இருந்தாலும் இதை நீங்கள் பழகும் போது மன அழுத்தம் குறைவதை உணருவீர்கள். வயிறு காலியாக இருப்பது அவசியம்.