என் மலர்
உடற்பயிற்சி
வறட்டு இருமலை குணமாக்கும் யோகா முத்திரை
- காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும். நல்ல பலன் கிடைக்கும்.
- லிங்க முத்திரை, பின் பிராங்கியல் முத்திரை, பின் ஆஸ்துமா முத்திரை என்று 2 நிமிடங்கள் ஒவ்வொரு முத்திரையும் பயிலுங்கள்.
நமது உடலில் வாத, பித்தம், சிலேத்துமத்தில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக சிலேத்துமம் (நீர்) அதிகமானால் அதிக சளி இருந்து கொண்டேயிருக்கும். எப்பொழுதும் மார்பில் சளி இருக்கும். அதனால் இருமல், வறட்டு இருமல் இருக்கும். இதற்கு கீழ் குறிப்பிட்ட முத்திரைகளை தினமும் பயிற்சி செய்யுங்கள். நலன் பலன் கிடைக்கும்.
லிங்க முத்திரை
எல்லா கை விரல்களையும் கோர்த்துக் கொள்ளுங்கள். இடது கை கட்டை விரலை நேராக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள்.
பிராங்கியல் முத்திரை
சுண்டு விரல், மோதிர விரலை மடக்கி கட்டை விரலின் அடிப்பாகத்தில் வையுங்கள். நடு விரலும் கட்டை விரல் நுனியையும் தொடவும். ஆள்காட்டி விரல் மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யுங்கள். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.
ஆஸ்துமா முத்திரை
நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனியுங்கள் பத்து வினாடி கள். பின் இரு கை நடு விரல்களை மடக்கி படத்தில் உள்ளது போல் வைக்கவும். கட்டை விரலை சேர்த்து இதயம் பார்க்க வைக்கவும். மற்ற விரல்களை நேராக படத்தில் உள்ளதுபோல் நீட்டி வைக்கவும் இரண்டு நிமிடங்கள், காலை, மதியம் , மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.
மேற்குறிப்பிட்ட முத்திரைகளை வரிசையாக முதலில் லிங்க முத்திரை, பின் பிராங்கியல் முத்திரை, பின் ஆஸ்துமா முத்திரை இரண்டு நிமிடங்கள் ஒவ்வொரு முத்திரையும் பயிலுங்கள்.
நாடி சுத்தி
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். இடது கை சின் முத்திரையில் இருக்கட்டும். வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து உடன் இடது நாசியை மோதிரவிரலால் அடைத்து வலது நாசி வழியாக மூச்சை வெளி விடவும். மீண்டும் இடதில் இழுத்து வலது நாசியில் மூச்சை வெளி விடவும். பத்து முறை செய்யவும்.
பின் இதனையே மாற்றி செய்ய வேண்டும். இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசியில் மூச்சை இழுத்து வலது நாசியை கட்டைவிரலால் அடைத்து இடது நாசியில் மூச்சை வெளிவிடவும். மீண்டும் வலதில் இழுத்து இடதில் வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும். நல்ல பலன் கிடைக்கும்.
பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)
63699 40440
pathanjaliyogam@gmail.com