search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    முழங்கால்வலி, மூட்டுவலியை குணமாக்கும் குக்குடாசனம்
    X

    முழங்கால்வலி, மூட்டுவலியை குணமாக்கும் குக்குடாசனம்

    • இதயவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.
    • இதய அடைப்பு, இதயவலி உள்ளிட்ட பிரச்சனையும் வராது.

    செய்முறை

    முதலில் விரிப்பில் அமர்ந்து பத்மாசனம் போடவும். ஒவ்வொரு கையையும் தொடை இடுக்கில் மிக மெதுவாக நுழைக்கவும். பிறகு உள்ளங்கைகள் நன்றாக தரையில் ஊன்றியபடி மெதுவாக எழவும். இதே நிலையில் 10 விநாடிகள் இருக்கவும்.

    பிறகு கீழே அமர்ந்து, மெதுவாக கால்களை அகற்றி, கைகளை சாதாரணமாக வைக்கவும். பின்னர் ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு, மறுபடியும் இதே போல ஒருமுறை செய்யவும். மூன்று முறை இந்த பயிற்சியை செய்யவும்.

    சற்றே கடினமான ஆசனம் இது. எனவே அவசரப்படாமல் நிதானமாக இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும்.

    இந்த ஆசனத்தை, சிறுவர்கள், பள்ளிப் பருவத்தில் மிக எளிமையாகப் பயின்று விடலாம். மிகவும் உடல் பருமன் உள்ளவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், இதயவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய முயற்சிக்க வேண்டாம். ஆனால், உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் அவர்களை செய்யச் சொல்லவும்.

    பலன்கள்

    கல்லீரல் மிகச் சிறப்பாக இயங்குவதோடு, அதிலுள்ள குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். நமது உடலில் உள்ள மண்ணீரல், சக்தி பெற்று நன்றாக இயங்கும்.

    ராஜ உறுப்பான இதயம் பாதுகாக்கப்படும். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் இந்த ஆசனத்தைப் பயின்றால், வளர்ந்தபிறகு அவர்களின் இதயமும் நுரையீரலும் பாதுகாக்கப்படும். இதய அடைப்பு, இதயவலி உள்ளிட்ட பிரச்சனையும் வராது.

    முழங்கால்வலி, மூட்டுவலி வராது. இருந்தாலும் நீங்கும். தசவாயுக்களும் சிறப்பாக இயங்கும். தோள்பட்டை வலி நீங்கும், தோள்பட்டை இறங்கியிருந்தால் சரியாகும். எனவே உடல் அழகுடன் இளமையாக நீங்கள் வாழலாம்.

    கை, கால்கள் நன்கு பலம் பெறும். கைவலி இருந்தால் சரியாகும். சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாகும். மனம் ஒரு நிலைப்படும். ஞாபகசக்தி வளரும். படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆசனத்தால் மிக நல்ல பலன் கிடைக்கும்!

    குக்குடம் என்றால் கோழி என்று பொருள். கோழி எப்படி காலையில் சுறுசுறுப்பாக எழுந்து கூவி, அனைவரையும் எழுப்பி சுறுசுறுப்பாக்குகிறதோ, அதே சுறுசுறுப்பு இந்த ஆசனம் செய்பவருக்கும் கிடைக்கும்!

    நரம்பு மண்டல இயக்கம் மிகச் சிறப்பாகும். கை கால் நடுக்கம், உடல் நடுக்கம் வராது.

    Next Story
    ×