என் மலர்
உடற்பயிற்சி

X
பாச முத்திரை
இறைசிந்தனையை அதிகரிக்கும் முத்திரை
By
மாலை மலர்28 Oct 2022 11:10 AM IST (Updated: 28 Oct 2022 11:11 AM IST)

- உடலிலுள்ள அசுத்தம் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேறும்.
- எதிர்மறை எண்ணங்கள் மறையும்.
செய்முறை :
இரு கைகளின் விரல்களை முதலில் மடக்கவும். ஆள்காட்டி விரல்களை மட்டும் வளைத்து ஒன்றோடொன்று இணைக்க வேண்டும். பின் இரு கட்டைவிரல்களையும் ஆள்காட்டி விரலுடன் நிமிர்ந்த நிலையில் இணைக்கவும். மணிக்கட்டுக்கு மேல் உள்ள கைகளின் கீழ்பகுதிகள் ஒன்றோடொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் மடக்கியபடி இருந்தால் போதும். இந்த மூன்று விரல்களும், வலது கை, இடதுகை, விரல்கள் இணையாமல் இடைவெளியுடன் இருக்க வேண்டும். இம்முத்திரையை நெஞ்சுக்கு அருகில் வைத்துக் கொள்ளவும்.
பலன்கள் :
உடலிலுள்ள அசுத்தம் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேறும். இறைசிந்தனை அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து உயர்வான எண்ணங்கள் உருவாகும். பற்று பாசம் குறையும்.
Next Story
×
X