என் மலர்
உடற்பயிற்சி
தோள்பட்டையை வலுவாக்கும் பயிற்சி
- இடுப்பு, தொடை, முன்னங்கைகளின் தசைகளுக்கும் பயிற்சி கிடைக்கிறது.
- உடலின் தோற்றத்தை பிரமிக்கும் வகையில் மாற்றிவிடும்.
இரண்டு கால்களையும் தோள்களிலிருந்து சற்றே விலக்கி நிற்க வேண்டும். சற்றே இடுப்பை வளைத்து இரண்டு கைகளிலும் டம்பிள்ஸை வைத்துக் கொள்ளவும். இடதுகாலை மட்டும் சற்றே முன்னெடுத்து வைத்து, பின்காலை பின்னோக்கி வைத்துக் கொள்ளவும். உடல் நேராக இருக்க வேண்டும். இரண்டு கைகளையும் மடக்கி, முகத்தின் இரண்டு பக்கத்திற்கு நேராக கொண்டு வரவும்.
வலதுகையை முன்புறமாக குத்துவதுபோல செய்ய வேண்டும். மீண்டும் பழையநிலைக்கு வலதுகையை கொண்டு வரவும். இப்போது இடதுகையை முன்பக்கம் குத்துவது போல செய்யவும். கால்களையும் மாற்றி வைக்க வேண்டும். இதேபோல் இரண்டு கைகளாலும் மாற்றி, மாற்றி 15 தடவைகள் வரை செய்யலாம். இப்பயிற்சியை செய்யும்போது உடல் எடை சரிசமமாக இரண்டு கணுக்காலிலும் பிரியுமாறு இருக்க வேண்டும். கைகளை நன்றாக நீட்டி செய்ய வேண்டும்.
பலன்கள்
தோள்பட்டைக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யும் பயிற்சியாக இது இருந்தாலும், இடுப்பு, தொடை, முன்னங்கைகளின் தசைகளுக்கும் பயிற்சி கிடைக்கிறது. கிட்டத்தட்ட பாக்சிங் பயிற்சி செய்வதைப்போலவே இருப்பதால் தோள்பட்டை தசைகள், விலா தசைகள் மற்றும் மேல்கை தசைகள் இறுக்கமடைந்து ஒட்டுமொத்த மேல் உடலின் தோற்றத்தை பிரமிக்கும் வகையில் மாற்றிவிடும்.