search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோடையில் குளுகுளு கிவி - புதினா ஜூஸ்
    X

    கோடையில் குளுகுளு கிவி - புதினா ஜூஸ்

    கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழங்களை அதிகம் சேர்த்து கொள்வது உடலுக்கும் மிகவும் நல்லது. இந்த வகையில் இன்று கிவி, புதினா சேர்த்து ஜூஸ் செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    கிவி - 1
    ஆப்பிள் - 1
    தேன் - தேவைக்கு
    புதினா - சிறிதளவு
    ஐஸ்கட்டிகள் - தேவைக்கு



    செய்முறை :

    * கிவிப் பழத்தின் தோலை எடுத்துவிட்டு மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.

    * ஆப்பிள் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி (தோல் எடுக்கவேண்டாம்) மிக்சியில் நைசாக அரைக்கவும்.

    * புதினா இலைகளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

    * அரைத்து வைத்துள்ள மூன்று ஜூஸ்களையும் ஒன்றாக சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்சியில் போட்டு அதனுடன் தேன், ஐஸ்கட்டிகள் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

    * அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி பரிமாறவும்.

    * குளுகுளு கிவி - புதினா ஜூஸ் ரெடி.

    * கிவியில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×