என் மலர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான கோதுமை மாவு இடியப்பம்
Byமாலை மலர்14 Sept 2017 10:59 AM IST (Updated: 14 Sept 2017 10:59 AM IST)
வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்தது கோதுமை மாவு இடியப்பம். இன்று இந்த இடியாப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
நீர் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி.
செய்முறை :
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கோதுமை மாவை போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
பின்பு ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைக்கவும்
நன்றாக கொதிக்க நீரை மாவில் சேர்த்து நன்கு பிசையவும். பின்பு அதன் மீது சிறிது எண்ணெய் தடவி மூடி 15 நிமிடம் வைக்கவும்.
இட்லி தட்டை எடுத்து அதில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும்
பின்பு சிறிது மாவை எடுத்து இடியப்பம் அச்சில் வைத்து இட்லி தட்டில் இடியப்பங்களாக பிழியவும்.
பின்பு இட்லி குக்கரில் வைத்து மூடி 10 முதல் 15 நிமிடம் வைத்து வேக வைக்கவும்
இடியப்பம் வெந்ததும் அதனை இறக்கி ஆற வைக்கவும். பின்பு கரண்டியால் அதனை எடுத்து வேறெரு பாத்திரத்தில் வைக்கவும்
சத்தான கோதுமை இடியப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story
×
X