search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிரண்டைப் பொடி செய்வது எப்படி
    X

    பிரண்டைப் பொடி செய்வது எப்படி

    வயிறு கோளாறு, வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்கள் பிரண்டைப் பொடியை செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரண்டைத் துண்டுகள் - 10,
    கறுப்பு உளுந்து, கடலைப் பருப்பு - தலா ஒரு கப்,
    பூண்டு பல் - 10,
    தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு,
    கறிவேப்பிலை - கைப்பிடியளவு,
    காய்ந்த மிளகாய் - 20,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வெறும் வாணலியில் கறுப்பு உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சி ஆகியவற்றை தனித்தனியாக சேர்த்து வறுத்து ஆற விடவும்.  

    அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பிரண்டைத் துண்டுகள் சேர்த்து வறுத்து எடுக்கவும்.

    அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று அரைக்கவும்.

    அதனுடன் உப்பு, பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து காற்று புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

    தேவைப்படும் போது சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு நல்லெண்ணெய் சேர்த்து தொட்டுக்கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×