என் மலர்
சமையல்
- சிறிய வாணலியை சூடாக்கி, தேங்காயை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பெரும்பாலும் இதை சமைப்பது கடினம் என்று நினைத்து சமைக்க மாட்டார்கள்.
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அனைவருக்கும் மிகப் பிடித்தமான ஒரு பழம் ஆகும். பெரும்பாலும் இதை சமைப்பது கடினம் என்று நினைத்து சமைக்க மாட்டார்கள். ஆனால் இந்த பலாபழத்தை வைத்து செய்யும் கூட்டானது செய்வதற்கு எளிமையானது மட்டும் இன்றி மிக மிக சுவையானதும் கூட.
தேவையான பொருட்கள்:
பலாப்பழம் (சக்கை/பழப்பழம்) - 1 கோப்பை
காரமணி - 2 டீஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
உப்பு - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 3/4 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 1 எண்
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு விதைகள் - 1 தேக்கரண்டி
உளுந்து பருப்பு (உளுத்தம் பருப்பு) - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2 எண்
கறிவேப்பிலை - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
* காரமணியை சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பலாப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
* 1/4 கப் தண்ணீரைப் பயன்படுத்தி காரமணியை 3 விசில் வரை அழுத்தி சமைக்கவும்.
* அடி கனமான பாத்திரத்தில், வெட்டிய பலாப்பழம், மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
* கடாயை மூடி சுமார் 6 முதல் 8 நிமிடங்கள் சமைக்கவும்.
* சமைத்த காரமணியை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் சமைக்கவும்.
* இதற்கிடையில், தேங்காய், சிவப்பு மிளகாய் மற்றும் சீரகத்தை ஒரு மென்மையான பேஸ்டாக அரைக்கவும்.
* இந்த கலவையை வேகவைத்த பலாப்பழத்தின் மீது ஊற்றவும். நன்கு கலந்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை இளங்கொதிவாக்கவும்.
* ஒரு சிறிய வாணலியை சூடாக்கி, 1 தேக்கரண்டி சேர்க்கவும். எண்ணெய் மற்றும் கடுகு விதைகள். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், உளுந்து பருப்பு (உளுத்தம் பருப்பு), சிவப்பு மிளகாய் மற்றும் சில கறிவேப்பிலை சேர்க்கவும். இந்த டெம்பரிங் சக்கா கறி மீது ஊற்றவும். வெப்பத்தை அணைக்கவும்.
* சிறிய வாணலியை சூடாக்கி, தேங்காயை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். தேங்காய் துருவல் உலக வாசனையை வீசுகிறது. இதை கறி மீது ஊற்றவும்.
* இப்போது சக்க கூட்டு கறி பிரசாதம் மற்றும் பரிமாற தயாராக உள்ளது.
- பீட்ரூட்டை தோல் உரித்து நறுக்கி வைக்கவும்.
- மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் ரசம் சுவைக்கத் தயார்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1
தக்காளி - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
தேங்காய் எண்ணெய் - 1டீஸ்பூன்
கடுகு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
பீட்ரூட்டை தோல் உரித்து நறுக்கி வைக்கவும்.
தக்காளி, பீட்ரூட் துண்டுகள், சீரகம், மிளகு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
எல்லாம் ஒரு வாணலியில் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து உப்பு கலந்து நன்கு கொதிக்கவிடவும்.
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.
இப்போது மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் ரசம் சுவைக்கத் தயார்.
- வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும்.
- வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும்.
தினை: கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தானியம். இதன் உற்பத்தியில் இந்தியாவுக்கே முதல் இடம். புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இதயத்தை பலப்படுத்தவும், கண்பார்வை சிறப்பாக இருக்கவும் துணைபுரியும். பிரமாதப் பலன்களைத் தரும் தினையில் உருவான பலகாரங்கள் நம் உடல்நலம் காக்கும்.
கேழ்வரகு: கேழ்வரகு, வெப்பமான பகுதிகளில் விளையும் தன்மை கொண்டது. அரிசி, கோதுமையை விட கேழ்வரகில் ஊட்டச்சத்துகள் அதிகம். குறிப்பாக சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி அதிக அளவில் உள்ளன. குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. கேழ்வரகில் கூழ் செய்து பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சாமை: அரிசியை விட இதில் நார்ச்சத்து பலமடங்கு உள்ளது. அதேபோல மற்ற சிறுதானியங்களை விட சாமையில் இரும்புச்சத்தும் அதிகம் உண்டு. இது, ரத்தசோகையை நீக்க உதவும். இதில் இட்லி, மிளகுப் பொங்கல் (வெண் பொங்கல்), இடியாப்பம், காய்கறி பிரியாணி என வகை வகையாக உணவுகளைச் செய்ய முடியும்.
வரகு: இது பல நாடுகளின் பாரம்பரிய உணவு. வறட்சியான நிலத்தில் கூட விளையும் ஆற்றல் கொண்டது. உடலுக்கு அதிக சக்தியளிக்கும். அரிசி, கோதுமையை விட இதில் நார்ச்சத்து அதிகம். விரைவில் செரிமானமாகும் தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ், மக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி அனைத்தும் நிறைந்துள்ளன. இதில் புட்டு, வெண் பொங்கல், கார பணியாரம், இட்லி, புளியோதரை, உப்புமா என விதவிதமாக செய்ய முடியும்.
கம்பு: இந்தியா முழுக்கப் பயிர் செய்யப்படும் தானிய வகை இது. வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும். உடல் உஷ்ணத்தை குறைக்கும். சோர்வை நீக்கி, புத்துணர்வு தரும். வளரும் குழந்தைகளுக்கும், பூப்பெய்திய பெண்களுக்கும் ஏற்றது. உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இதில் உள்ளதால், இதய நோயிலிருந்து பாதுகாக்கும்.
சோளம்: இந்தியாவில் பஞ்ச காலத்தில், மக்கள் பசியை அதிகம் போக்க உதவிய தானியம் இது. நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்தது. உடல் எடையை அதிகரிக்க உதவும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், செரிமானக் கோளாறு பிரச்சினை இருப்பவர்கள், ரத்தசோகை இருப்பவர்களுக்கு சோளம் சிறந்தது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண் குறைபாடுகளைச் சரிசெய்ய உதவும். இதில் தோசை, பணியாரம் தயாரிக்கலாம்.
சிறுதானியங்களில் கஞ்சி, கூழ், களி, தோசை, பொங்கல், அடை, பிரியாணி, கொழுக்கட்டை, இனிப்பு, கார பலகாரங்கள் போன்ற பல சுவையான, ஆரோக்கியம் பெருக்கும் உணவுகளை தயாரிக்கலாம். சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வோம். நமது பாரம்பரியத்தைப் போற்றி வளர்ப்போம்.
- துருவிய தேங்காயை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- சிக்கனை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேக வைக்கவும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
வறுத்து அரைக்க:
பட்டை - 2
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
மராட்டி மொக்கு -1
அன்னாசி பூ -1
கல்பாசி - சிறிதளவு
வரமிளகாய் - 4
தனியா - 2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
முந்திரி- 10
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 5 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கடாயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சீரகம் 1 ஸ்பூன், பெருஞ்சீரகம் 1 ஸ்பூன், கசகசா 1 ஸ்பூன் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அதே கடாயில் 5 ஸ்பூன் துருவிய தேங்காயை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம் சிறிதளவு சேர்த்து, கருவேப்பிலை போட்டு, வர மிளகாயை கிள்ளி போடவும். இதனுடன் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். நன்கு வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இதனுடன் சிக்கனை சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் கழித்து வறுத்து அரைத்த பொடியை சேர்க்க வேண்டும். சிக்கனை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேக வைக்கவும். இடையிடையே கலந்து விட்டு, 20 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சூடான சுவையான சிக்கன் வறுவல் தயார்.
- மசாலா தடவிய மீனை தோசை கல்லில் வைத்து லேசாக இரண்டு புறமும் வேக வைக்க வேண்டும்.
- வாழை இலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
தேவையான பொருட்கள் :
மீன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 10
மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன்
கரம்மசாலா பொடி - 2 ஸ்பூன்
பூண்டு - 4
இஞ்சி - சிறிது
புதினா, கொத்தமல்லி இலை - சிறிது
கறிவேப்பிலை - 2 கொத்து
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக பிசறி தனியாக வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லி இலை தட்டிய இஞ்சி, பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.
பிறகு மசாலா தடவிய மீனை தோசை கல்லில் வைத்து லேசாக இரண்டு புறமும் வேக வைக்க வேண்டும்.
அதன் பிறகு வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் சிறிதளவு மசாலாவை வைத்து பரப்பி விட வேண்டும்.
நடுவில் மீனை வைத்து மீனின் மேல் மீண்டும் மசாலாவைத் நன்றாக கலந்து விட வேண்டும்.
இப்போது இலையை மடக்கி நன்றாக பேக் செய்ய வேண்டும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள வாழை இலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான கேரளா ஸ்டைல் மீன் பொளிச்சது ரெடி. இதனை சாதம், இட்லி அல்லது தோசையுடன் சாப்பிடலாம்.
- சிக்கன் முக்கால் பாகம் வெந்த பிறகு வாணலியை இறக்கிவிடவும்.
- சிக்கன் மஷ்ரூமை சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
மஷ்ரூம் - 1/2 கிலோ
சோள மாவு - 100 கிராம்
மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
பூண்டு - 2 முழுஅளவு
பிரெஷ் கிரீம் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன், சோளமாவு, மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து அவற்றை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மஷ்ரூம்களை உங்களுக்கு தேவைப்படும் வடிவில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் ஊற வைத்துள்ள சிக்கன் கலவையை போட்டு நன்கு வதக்கவும். சிக்கன் முக்கால் பாகம் வெந்த பிறகு வாணலியை இறக்கிவிடவும்.
பின்னர் ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு கட் செய்து வைத்துள்ள மஷ்ரூம்களை சேர்க்கவும், அதனுடன் சிறிதாக நறுக்கி வைத்துள்ள பூண்டு அதற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனை தொடர்ந்து ஏற்கனவே பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒரு கலவையாக வரும் நேரத்தில் பிரெஷ் கிரீமை அதனுடன் சேர்த்து ஒரு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். பின்னர் கொத்தமல்லி இலைகளை சேர்த்து பரிமாறவும்.
சிக்கன் மஷ்ரூம் கிரேவி சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
- சர்க்கரை பாகில் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.
வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் பெண்களுக்கு கையும் ஓடாது... காலும் ஓடாது... என்ன செய்வது என்று தெரியாமல் திணருவோம்... அப்போ நமக்கு ஈஸியா ஒரு ஸ்வீட் ரெடி பண்ணணும் தோணும். அப்போ இதை பண்ணுங்க... வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து மிகவும் சுவையாகவும், சுலபமாகவும் செய்ய கூடிய ரெஸிபி....
தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
மைதா - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
எண்ணெய் (அல்லது) நெய் தேவையான அளவு
ஏலக்காய் தூள்
செய்முறை:
முதலில் சர்க்கரை 1 கப் மற்றும் தண்ணீர் 1/2 கப் சேர்த்து கொதிக்க (5 நிமிடங்கள்) வைத்து பாகு தயாரித்து கொள்ளவும். இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் ரவை + கோதுமை மாவு+ மைதா தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடாக்கி அதில் நாம் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி பொரித்து எடுக்கவும்.
நாம் பொரித்து வைத்துள்ள பூரிகளை சர்க்கரை பாகில் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.
சுவையான மால்புவா தயார்...
- சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்துத் பாலை நன்கு கொதிக்க விட வேண்டும்.
தேவையானவை :
பால் - 2 1/2 கப்
தோல் நீக்கிய கனிந்த மாம்பழ துண்டுகள் - ஒரு கப்
சர்க்கரை - 1/4 கப்
பிஸ்தா - 5
பாதாம் - 4
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்துத் விட்டு பிறகு இறக்கி அதில் பாதாமை போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து, பின் அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
2. பின்னர் பிஸ்தாவையும் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துத் வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கி, அதில் குங்குமப்பூவை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
3. பிறகு மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் போட்டு , அத்துடன் சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
4. பின் குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்துத் பாலை நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
5. பாலானது குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ் சேர்த்துத் , ஏலக்காய் பொடி, பாதாம், பிஸ்தா, சேர்த்துத் கிளறி பரிமாறினால், சுவையான மாம்பழ ரப்ரி ரெடி!!!
- முட்டையாக சேர்த்து நன்றாக கலக்கவும்.
- மாவையும் பேக்கிங் பவுடரையும் ஒன்றாக கலந்து தனியாக வைக்கவும்.
மிருதுவான கப்கேக்கை அற்புதமான டீயுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
தயாரிப்பு நேரம்: 15 நிமிடங்கள்
பேக்கிங் நேரம்: 25 நிமிடங்கள்
எத்தனை: 4 முதல் 6 கப்கேக் செய்ய
தேவையானவை:
மாவு - 150 கி.
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - 110 கி.
சர்க்கரை - 200 கி.
பீநட் பட்டர் - 4 மேசைக்கரண்டி
முட்டைகள் - 2
வெண்ணில்லா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
பால் - 80 மி.லி.
செய்முறை:
1. ஓவனை முன்னதாகவே 180 செல்சியஸுக்கு சூடாக்கவும். கப்கேக் மோல்டில் எண்ணெயை பூசவும். மாவையும் பேக்கிங் பவுடரையும் ஒன்றாக கலந்து தனியாக வைக்கவும்.
2. வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து திக்காகும் வரை நன்றாக அடிக்கவும். பீநட் பட்டரை சேர்த்து மீண்டும் நன்றாக அடிக்கவும்.
3. ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்றாக கலக்கவும். வெண்ணில்லா எசன்ஸை கலக்கவும்.
4. இல்லையென்றால் பால், மாவை சேர்க்கவும்.
5. இந்த கலவையை கப்கேக் மோல்டில் ஊற்றவும். 20 அல்லது 25 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். சூடாகவோ, சில்லென்றோ பரிமாறலாம்.
- வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வந்தவுடன், அரைத்த முந்திரியை சேர்க்கவும்
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 500 கி
இறால் - 500 கி
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சை பழம் - 1/2
தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 1 ஸ்பூன்
புதினா - சிறிதளவு
கொத்தமல்லை - சிறிதளவு
முந்திரி (அ) பாதாம் பருப்பு - 10 (சுடுநீரில் ஊற வைத்து அரைக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை
செய்முறை:
இறாலை நன்கு கழுவி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த இறாலை பொரித்து எடுக்கவும்.
அதே எண்ணெயில் கூடுதலாக எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து பொரிய விடவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் அதனுடன் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி, தயிரை சேர்த்து கிளறி விடவும். அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் வைக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்தவுடன், அரைத்த முந்திரியை சேர்க்கவும். முந்திரி சேர்த்தவுடன் கிரேவி கெட்டியாக மாறும். அதனால் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பின்னர் பொரித்து வைத்துள்ள இறால் சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஊற வைத்த பிரியாணி அரிசி, உப்பு, பிரிஞ்சி இலை, சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். அரிசி குழையாமல், வெந்து இருந்தால் போதும். இந்த பதத்தில் வடித்து உதிரியாக எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இறால் கலவையில் வேக வைத்த சாதத்தை சேர்த்து மெதுவாக உடையாமல் கிளறி விடவும். சாதத்தை ஒன்றாக்கி அதன் மேல் கொத்தமல்லி, புதினா தூவி 10 நிமிடம் மூடி வைத்து தம் போடவும். தம் போட ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடி மேல் வைக்கலாம்.
10 நிமிடம் ஆனவுடன் அடுப்பை அணைத்து விடவும். மேலும் 10 நிமிடம் கழித்து திறக்கவும். சுவையான இறால் தம் பிரியாணி ரெடி.
- கூட்டோ, குழம்போ கொதித்த பின் தீ எரியும் அளவை குறைத்து விட்டால் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.
- வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது.
* அடுப்பில் வைத்த பாத்திரம் தீய்ந்து கருகி போனால் உப்பு நீரில் ஒரு நாள் இரவு முழுக்க ஊற வைத்து மறுநாள் காலையில் அழுத்தி தேய்க்க சுத்தமாகி விடும்.
* தயிர் புளித்துப்போனால் அதில் 4 டம்ளர் நீர் ஊற்றி அரைமணி நேரம் கழித்து மேலே நிற்கும் நீரை மட்டும் கீழே ஊற்றி விட்டால் தயிர் புளிக்காது.
* பாட்டில் மூடியை திறக்க முடியாமல் போனால் ஈரத்துணியால் மூடியை இறுகப்பற்றி கொண்டு திருகினால் சுலபமாக கழன்று விடும்.
* கூட்டோ, குழம்போ கொதித்த பின் தீ எரியும் அளவை குறைத்து விட்டால் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.
* மிளகாய் தூள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காயக் கட்டியைப் போட்டு வைத்தால் நீண்ட நாள் காரம், மணம் மாறாமல் இருக்கும்.
* சாம்பார் செய்து இறக்குவதற்கு முன் 2 தக்காளிகளை மிக்சியில் அரைத்து சேர்க்க அதிக ருசி கிடைக்கும்.
* மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காயை இட்லி தட்டில் வைத்து சிறிது நேரம் வேக வைத்து, ஊறுகாய் போட்டால் விரைவாக ஊறும், சத்துக்களும் வீணாகாது.
* லேசான தீக்காயம் என்றால் ஒரு வாழைப்பழத்தை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி சூடுபட்ட இடத்தில் வைத்தால் குளுகுளுவென்று இருக்கும். அரிப்பு ஏற்படாது.
* அரிசி, தானியங்களை வைக்கும் டப்பாவில் பூச்சிகள் தொல்லை இருந்தால் அதில் பூண்டு அல்லது மஞ்சள் துண்டு போட்டால் பூச்சிகள் அண்டாது.
* வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது.
* புரோட்டாவிற்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு மில்க் மெயிட் சேர்க்க ருசியாக இருக்கும்.
* பூண்டுவை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் அதன் மேல் தோலை எளிதாக நீக்கி விடலாம்.
* உளுந்து வடை மாவில் சிறிது நெய் சேர்த்தால் வடை மொறு மொறுப்பாக இருக்கும். அதிக எண்ணெய் செலவாகாது.
* கட்லெட்டில் அதிக ருசி கிடைக்க அதற்குரிய மாவில் சிறிதளவு ரொட்டித் தூள் அல்லது ரவை சேர்க்க வேண்டும்.
- சிக்கனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
சன்டே ஸ்பெஷல் கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் அதனை நன்கு கழுவி கடைசியாக ஒரு முறை மஞ்சள் தூள் சேர்த்து கழுவிக்கொள்ளவும். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை இரண்டையும் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆறிய பின் வறுத்த சோம்பு, கறிவேப்பிலையுடன் பொடித்து, அதனுடன் மிளகுத்தூள் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின் மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து குறைந்த தீயில் வதக்க வேண்டும்.
இதனுடன் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து சிறிதளவு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான கறிவேப்பிலை மிளகு சிக்கன் தயார்.
கிரேவி பதமாக இருந்தால் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கழித்து இறக்கினால் ட்ரை கறிவேப்பிலை மிளகு சிக்கன் தயார்.