என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சமையல்
![காரசாரமான காலிபிளவர் சில்லி காரசாரமான காலிபிளவர் சில்லி](https://media.maalaimalar.com/h-upload/2022/08/13/1745509-cauliflower-chilli.jpg)
X
காரசாரமான காலிபிளவர் சில்லி
By
மாலை மலர்13 Aug 2022 10:53 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- குழந்தைகளுக்கு காலிபிளவர் சில்லி மிகவும் பிடிக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிபிளவர் - 1
மைதா - அரை கப்
சோள மாவு - கால் கப்
அரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
செய்முறை :
காலி பிளவர் பூவை தனித்தனியாக பிரித்தெடுத்துக்கொள்ளவும்.
கடாயில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து காலிபிளவரை கொட்டி சிறிது நேரம் வேகவைத்து இறக்கவும்.
வேக வைத்த காலிபிளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரட்டி வைத்த காலிபிளவர் பூவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
இப்போது ருசியான காலிபிளவர் சில்லி ரெடி.
Next Story
×
X