search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    ஹோட்டலுக்கு போக வேண்டாம்... வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் லாலிபாப்...
    X

    ஹோட்டலுக்கு போக வேண்டாம்... வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் லாலிபாப்...

    • குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் விங்ஸ் - 7

    சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    எலுமிச்சை சாறு - பாதி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    மிளகு தூள் - தேவையான அளவு

    மைதா மாவு - 1/4 கப்

    சோள மாவு - 1/4 கப்

    முட்டை - 1

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * சிக்கன் விங்ஸ்களை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அந்த சிக்கன் துண்டுகளில் மூன்று பாகம் இருக்கும் அதில் கீழே இருக்கும் சிறிய பகுதியை வெட்டி விடவும், அதன் பின்னர் அதில் இருக்கும் எலும்புகளின் சதையை கத்தியால் மேலே தள்ளி லாலிபாப் போன்ற வடிவத்திற்கு கொண்டு வரவும்.

    * ஒரு பாத்திரத்தில், சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, அரை எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.

    * இதில் தயார் செய்து வைத்து உள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, அவற்றின் அனைத்து பகுதிகளிலும் மசாலா படுமாறு நன்றாக தடவி 30 நிமிடத்திற்கு ஊறவைக்க வேண்டும்.

    * இன்னொரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, முட்டை, சிறிதளவு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து ஓரளவிற்கு கெட்டியான பதத்தில் கிளறி கொள்ள வேண்டும்.

    * ஊற வைத்து உள்ள சிக்கன் துண்டுகளை இந்த கலவையில் முக்கி, எண்ணெயில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

    * தற்போது சுவையான ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் லாலிபாப் தயார்.

    Next Story
    ×