என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சமையல்
![சூடான சாதத்துடன் சாப்பிட சூப்பரான தேங்காய் பால் குழம்பு சூடான சாதத்துடன் சாப்பிட சூப்பரான தேங்காய் பால் குழம்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/06/22/1902436-thengai-paal-kulambu.webp)
சூடான சாதத்துடன் சாப்பிட சூப்பரான தேங்காய் பால் குழம்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இந்த குழம்பு தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
- இதில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் ஆரோக்கியமானதும் கூட.
தேவையான பொருட்கள்
தேங்காய் - 1
உருளைக்கிழங்கு - 4
கத்திரிக்காய் - 4
முருங்கைக்காய் - 1
எலுமிச்சை - 1/2
பூண்டு - 1
ப.மிளகாய் - 4
மல்லி - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
மிக்ஸியில் மிளகாய், மல்லி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் தேங்காயை துருவி, மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி, தனியாக ஒரு பாத்திரத்தில் இரண்டாவது பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது பாலில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, உப்பு தூவி, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
காய்கறிகளானது வெந்ததும், அதில் முதல் தேங்காய் பாலை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பிறகு மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் குழம்பில் கொட்ட வேண்டும்.
இறுதியில் அதில் எலுமிச்சையை பிழிந்து இறக்கினால், தேங்காய் பால் குழம்பு ரெடி!!!
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health