search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    கோயமுத்தூர் ஸ்பெஷல் பச்சைப்பயிறு குழம்பு
    X

    கோயமுத்தூர் ஸ்பெஷல் பச்சைப்பயிறு குழம்பு

    • பச்சை பயற்றில் இரும்புச்சத்து அதிகளவு உள்ளது.
    • கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பச்சை பயறு உதவுகிறது.

    தேவையான பொருட்கள்

    முளைகட்டிய பச்சை பயறு - 1/2 கப்

    தக்காளி - 1

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    பூண்டு - 3 பல்

    புளி - 1 எலுமிச்சை அளவு

    சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    கறிவேப்பிலை - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    முளைகட்டிய பச்சை பயறை குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கி மசித்து கொள்ளவும்.

    புளியை 2 கப் நீரில் ஊற வைத்து கரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்க வேண்டும்.

    பின்பு அதில் புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.

    குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள பச்சை பயறை லேசாக மசித்துப் போட்டு, மீண்டும் 3-5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    இப்போது சுவையான பச்சை பயறு குழம்பு ரெடி!!!

    இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    புளி சேர்க்காமலும் இந்த குழப்பை செய்யலாம். சூப்பராக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×