search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    கேரளா சம்மந்தி
    X

    கேரளா சம்மந்தி

    • 5 நிமிடங்களில் தயாராகும் சம்மந்தியை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..
    • தண்ணீர் சேர்க்காமல் செய்வதால் இது விரைவில் கெட்டுப்போகாது.

    சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பலரால் அதிகம் தேடியது 'கேரளா சம்மந்தி'. 5 நிமிடங்களில் தயாராகும் சம்மந்தியை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..

    தேவையான பொருட்கள்:

    தேங்காய் எண்ணெய் -1 ஸ்பூன்

    காய்ந்த மிளகாய் -6

    இஞ்சி - 1 துண்டு

    தேங்காய் - 1

    சின்ன வெங்காயம் - 10

    புளி - சிறிதளவு

    கறிவேப்பிலை -1 கொத்து

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அம்மி அல்லது மிக்சி ஜாரில், காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், புளி, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும். அடுத்து இதை நன்கு கலந்து உருட்டி வைத்தால் ருசியான கேரளா சம்மந்தி தயார்.

    இதை சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு சுவைக்கலாம். தண்ணீர் சேர்க்காமல் செய்வதால் இது விரைவில் கெட்டுப்போகாது.

    Next Story
    ×