என் மலர்
சமையல்
கர்ப்பக்கால மசக்கையை கட்டுப்படுத்தும் மாதுளை மணப்பாகு
முன்பு முன்னோர்கள் கைவைத்திய முறையில் மசக்கை வாந்தியை தவிர்க்காமல் கட்டுப்படுத்தவும் செய்வார்கள். சித்த மருத்துவத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மசக்கையை கட்டுப்படுத்த முதல் மூன்று மாதங்கள் வரை மாதுளை மணப்பாகு எடுத்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மாதுளை மணப்பாகு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வீட்டிலேயே சுத்தமான முறையில் மாதுளை மணப்பாகு தயாரிக்கவும் செய்யலாம்.
தயாரிக்கும் முறை
மாதுளம்பழம் - 5 பெரிய பழமாக பெரிய முத்துகளாக எடுத்துகொள்ள வேண்டும்.
பனைவெல்லம், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு - ருசிக்கேற்ப
சுத்தமான தேன் - அரை கப்,
ஏலக்காய் - 4
பன்னீர் - 1 தேக்கரண்டி
செய்முறை
மாதுளை முத்துக்களிலிருந்து சாறு பிழிந்து தனியாக வைக்கவும்.
இப்போது இனிப்புக்கு சேர்க்கப்படும் பனைவெல்லம், நாட்டுசர்க்கரை அல்லது பனங்கற்கண்டு எதுவாக இருந்தாலும் அதை பாகு காய்ச்ச வேண்டும். பாகு தயாரானதும் மாதுளை சாறை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். பிறகு பன்னீர் சேர்த்து ஏலத்தை பொடித்து கலந்து இறக்கும் போது தேன் சேர்த்து இறக்கவும்.
இவை நன்றாக சேர்ந்து அடர்த்தியாக மாறியிருக்கும்.
இப்போது ஆறவைத்து கண்ணாடி ஜாரில் ஊற்றி வைக்கவும்.
இதுதான் மாதுளை மணப்பாகு என்றழைக்கப்படுகீறது.
தினமும் காலையிலும் இரவிலும் 2 டீஸ்பூன் அளவு இதை குடித்துவந்தால் போதும். கர்ப்பக்கால மசக்கை நீங்கும். வாந்தி, உடல் சோர்வு நீக்கும். ரத்த சோகை வராமல் தடுக்கும் அளவு சத்து கொண்டது. கர்ப்பக்காலம் முழுவதுமே மசக்கை பிரச்சனை இல்லாமல் இருக்க இதை சாப்பிடலாம். கருப்பையில் இருக்கும் கருவின் வளர்ச்சியை ஆரோக்கியமாகவே உறுதி செய்யகூடியது இந்த மாதுளை மணப்பாகு.
சுவையிலும் ருசியிலும் மட்டும் அல்ல சத்திலும் முதன்மையானது இது.