search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    மொறு மொறுப்பான பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ்
    X

    மொறு மொறுப்பான பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ்

    • இது அனைவருக்கும் பிடித்தமான மாலை நேர சிற்றுண்டி.
    • நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    ரவை - ½ கப்

    உருளைக்கிழங்கு - 2

    சோள மாவு - 2 மேஜைக்கரண்டி

    பூண்டு பல் - 5

    சில்லி ஃப்ளேக்ஸ்- 1 மேஜைக்கரண்டி

    சாட் மசாலா - ¼ மேஜைக்கரண்டி

    வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    * பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். ( இதில் தண்ணீர் இதில் சேர்ந்து விடாமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம்.)

    * மிக்ஸியில் ரவையை போட்டு நைசாக அரைத்து வைத்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    * பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் சில்லி ஃப்ளேக்ஸ்ஸை போட்டு நன்கு கலந்து விட்டு சுமார் அரை நிமிடம் வரை அதை வதக்கவும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் ரவையை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    * பின்னர் அதில் நாம் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் சாட் மசாலாவை போட்டு அதை நன்கு கலந்து விட்டு பின்பு அடுப்பை அணைத்து அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும். (சாட் மசாலாவை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)

    * உருளைக்கிழங்கு கலவை சிறிது ஆறியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் சோள மாவை போட்டு 5 நிமிடம் கைகளால் நன்கு பிசையவும்.

    * 5 நிமிடத்திற்கு பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    * ஒரு கிண்ணத்தில் சிறிதளவு சோள மாவை கொட்டி வைத்து கொள்ளவும்.

    * சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கலவையை எடுத்து நம் கைகளில் வைத்து தட்டி அதை கிண்ணத்தில் இருக்கும் சோள மாவில் இரு புறமும் போட்டு எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து நன்கு அனைத்து புறங்களிலும் சமமாக தேய்க்கவும்.

    * பின்பு ஒரு பெரிய சைஸ் டம்ளர் மற்றும் அதற்கு அடுத்த சைஸ் சின்னதாக இருக்கும் டம்ளரை எடுத்து கொள்ளவும்.

    * பின்னர் நாம் தேய்த்து வைத்திருக்கும் மாவில் முதலில் பெரிய டம்ளரை வைத்து அச்சி ஏற்படுத்தவும், பின்பு சிறிய சைஸ் டம்ளரை நாம் ஏற்படுத்திய அச்சின் உள்ளே வைத்து இன்னொரு அச்சியை ஏற்படுத்தி அதில் வரும் ரிங்ஸ்ஸை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    * இவ்வாறு மீதமுள்ள ரிங்ஸ்களை செய்து எடுத்து ஒரு தட்டில் தயாராக வைத்து கொள்ளவும்.

    * இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்திருக்கும் ரிங்ஸ்களை போட்டு பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.

    * சூடான மற்றும் மொறு மொறுப்பாக இருக்கும் பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் தயார்

    Next Story
    ×