search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    ரவை குலோப் ஜாமூன்
    X

    ரவை குலோப் ஜாமூன்

    • அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
    • சர்க்கரை ஜீராவில் 5-6 நிமிடத்திற்கு ஊறவைத்து பிறகு இதனை பரிமாறலாம்.

    தேவையான பொருட்கள் :

    ரவை – 1 கப்

    நெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

    பால் – 1 1/4 கப்

    சர்க்கரை – 1 1/2 கப்

    தண்ணீர் – 1 1/2 கப்

    ஏலக்காய் தூள் – 1 1/4 டீஸ்பூன்

    கேசரி பவுடர் – 1/2 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்

    எண்ணெய் – தேவையான அளவு

    செய்முறை :

    • முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். அதில் 1 கப் ரவையை சேர்த்து 4-5 நிமிடத்திற்கு அதில் உள்ள பச்சை வாசம் போகின்ற அளவுக்கு மட்டும் வறுத்துக் கொள்ளவும்.

    • இதனுடன் 1 கப் அளவுக்கு பாலை ஊற்றி நன்கு வேகவிடவும். பின்னர் இதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும். சூடு ஆறியவுடன் அதனுடன் மீதமுள்ள 1/2 கப் பால், 1/4 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து இதனை நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்தவுடன் அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

    • பின்னர் அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்திருந்த 1 1/2 கப் சர்க்கரையை சேர்த்து அதனுடன் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி அதில் உள்ள சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்.

    • ஓரளவு கொதித்து ரொம்ப தண்ணீராகவும் இல்லாமல் ரொம்ப கெட்டியாக சர்க்கரை பாகுபோலவும் இல்லாமல் குலாப்ஜாமுனின் மேலே ஊற்றக்கூடிய ஜீரா போல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் 1/2 டீஸ்பூன் கேசரி பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

    • பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் குலாப்ஜாமூன் உருண்டைகளை பொரிக்கின்ற அளவுக்கு எண்ணெயை ஊற்றி அதில் நாம் முன்பு உருட்டி வைத்திருந்த உருண்டைகளை போட்டு பொரித்துக் கொள்ளவும்.

    • பொரித்து எடுத்த அனைத்து உருண்டைகளையும் செய்து வைத்துள்ள சர்க்கரை ஜீராவில் 5-6 நிமிடத்திற்கு ஊறவைத்து பிறகு இதனை பரிமாறலாம்.

    இப்பொழுது நமது மிகவும் சுவையான மற்றும் மிருதுவான ரவை குலாப்ஜாமூன் ரெடி..!

    Next Story
    ×