என் மலர்
லைஃப்ஸ்டைல்
X
ஆடி தள்ளுபடியில் அசத்தும் தரமான ஆடைகளின் அணிவகுப்பு
Byமாலை மலர்27 July 2016 8:52 AM IST (Updated: 27 July 2016 8:52 AM IST)
எத்தனை விதமான தள்ளுபடியானாலும் ஆடை அணிவகுப்புகளுக்கு நிகராய் எதுவும் நிற்காது
ஆடி மாதம் என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஆடி தள்ளுபடி தான். ஆண்டு முழுவதும் பல நிகழ்வுகளுக்கு என ஆடைகளை வாங்கினாலும் ஆடி தள்ளுபடியில் ஆடை வாங்குவது தனி சுகம். காரணம் அனைத்து துணிமணி கடைகளும் ஆடி மாதம் விதவிதமாய் தள்ளுபடிகளை அறிவித்து ஆச்சர்யமூட்டும். ஆடை நிறுவனங்கள் மட்டுமின்றி தற்போது நகை கடைகள், பேஷன் ஜுவல்லரிகள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, வீட்டு உபயோக பொருட்கள் போன்ற அனைத்து விதமான விற்பனை நிலையங்களும் ஆடி தள்ளுபடியை வழங்கி மக்களை மகிழ்விக்கின்றன. எத்தனை விதமான பொருளில் ஆடி தள்ளுபடி வழங்கினாலும் ஆடை நிறுவனங்கள் தரும் தள்ளுபடிதான் மக்களுக்கு மிகவும் பிடித்தமானது.
ஆடி தள்ளுபடி என்றதும் முந்தைய ஆண்டின் விற்பனையாகாத பழைய கழிவு துணிகளை தான் விற்பனை செய்கின்றனர் என பலர் நினைக்கின்றனர். அது தவறு. முன்பு ஆடி மாதம் பீடை மாதம் என்றவாறு பலர் கடைக்கு சென்று ஆடைகள் கூட வாங்குவது கிடையாது. அதில் மாற்றம் செய்ய நினைத்த வியாபாரிகள் சிலர் மொத்த கொள்முதல் விலையிலேயே ஆடைகளை மிக மலிவான விலையில் வழங்க தீர்மானித்தனர். இதன் மூலம் ஆடி மாதம் மந்தமான விற்பனை என்பதில் மாற்றம் பெற்று ஆடி மாத விற்பனையும் அமோகமானது. இது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு விடையாய் நிற்பது மொத்த கொள்முதல்தான்.
ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சென்று ஆடிமாதம் விற்பனைக்கு என்று தரமான புதிய ஆடைகளை மொத்த கொள்முதல் விலைக்கு வாங்கி வருகின்றனர். இந்த ஆடை கொள்முதல் என்பது ஒரே டிசைன் ஆடை ரகம் ஆயிரக்கணக்கில் வாங்குவது. இதன் மூலம் மிகமிக குறைந்த விலைக்கு தரமான ஆடைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. விற்பனையகங்கள் தங்களுக்கு சிறிய அளவு லாபம் எடுத்துக்கொண்டு தள்ளுபடி விலையில் தரமான ஆடைகளை வழங்குகின்றன. அதிக விற்பனையில் லாபம் என்பதும் இரட்டிப்பாகிறது.
புதிய புதிய டிசைன் ஆடைகள் ஆடி மாதம் தொட்டே கடைகளில் அரங்கேற்றமாகிவிடுகிறது. இதன் மூலம் ஆண்டின் அடுத்த வரும் விழா மற்றும் பண்டிகைக்கு என பல புதிய ஆடைகளை வாடிக்கையாளர்கள் முன்பே வாங்கி வைத்து வருகின்றனர். இதன்மூலம் தள்ளுபடி விலையில் தரமான ஆடைகளை பெறுவதுடன் பண்டிகை கால கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்கவும் முடிகிறது.
மேலும் ஆடி மாதம் அடுத்து வரும் மாதங்களில் தொடர்ந்து திருமண முகூர்த்தங்கள் வைக்கப்படும் அவற்றிற்கு ஏற்றவாறு அனைத்து உறவுகளுக்கும் ஆடைகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். திருமணவிழா மொத்த கொள்முதல் என்பதிலும் விற்பனை நிலையங்கள் கூடுதல் தள்ளுபடியும் வழங்குகின்றன. புத்தம்புதிய ஆடை அணிவது என்பது அனைவருக்கும் பிடித்தமானது.
இன்றைய நாளில் அவ்வப்போது புதிய ஆடைகள் அணியும் விழா, பண்டிகை, பிறந்தநாள், திருமண நாள் போன்றவை வந்து கொண்டே உள்ளன. இவற்றிற்கு தேவையான அனைத்து ஆடைகளையும் இந்த ஆடி தள்ளுபடியில் அள்ளி விடுகின்றனர். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். ஒன்றுக்கு இரண்டு இலவசம். 75 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை விலைகுறைப்பு தள்ளுபடி, பரிசு கூப்பன்கள் போன்றவாறு ஆடி தள்ளுபடி தனித்தனி ரகமாய் உள்ளன.
எத்தனை விதமான தள்ளுபடியானாலும் ஆடை அணிவகுப்புகளுக்கு நிகராய் எதுவும் நிற்காது. அதுபோல் பிராண்ட் ஆடை நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் நிறுவன ஆடை விற்பனையகங்கள் கூட பல சிறப்பு ஆடி தள்ளுபடி வழங்குகின்றன. ஆடி தள்ளுபடியில் ஆடை வாங்கவே அண்டை மாநிலத்தவர் கூட தமிழகம் நோக்கி படை எடுக்கின்றனர். எண்ணற்ற ரகம் மலிவான விலை என்பதுடன் தரமான ஆடைகள் என்பதில் ஆடி தள்ளுபடி என்றும் மக்களை திருப்தி செய்கிறது.

Next Story
×
X