search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    வாரம் ஒருமுறை வெள்ளைக்கரு பேஸ் பேக் போட்டால் சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள்...
    X

    வாரம் ஒருமுறை வெள்ளைக்கரு பேஸ் பேக் போட்டால் சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள்...

    • இளமையுடம் நீண்ட நாட்கள் இருக்க வாரம் ஒருமுறை இந்த பேஸ் பேக் போடுங்கள்.
    • முட்டையை வைத்து எப்படியெல்லாம் உங்கள் அழகை பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.

    முட்டையில் உள்ள புரோட்டீன் நல்ல மாய்ஸ்சுரைசராகவும், சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கவும் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்க உதவும். எனவே நீங்கள் வெள்ளையாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வாரம் ஒருமுறை முட்டை கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கிய முட்டையை வைத்து எப்படியெல்லாம் உங்கள் அழகை பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.

    * முல்தானிமிட்டி இரண்டு ஸ்பூனுடன் முட்டையில் வெள்ளையை கலந்து பேஸ்ட் போல் கலக்கிக்கொள்ளுங்கள். முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதனால் முகப்பரு நீங்கி சரும நிறத்தை பொலிவாக்கும்.

    * முட்டையில் வெள்ளைப் பகுதியை தனியாக எடுத்து நன்கு கலக்குங்கள். அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை முகத்தில் சீராகத் தடவுங்கள். 20 நிமிடங்கள் காத்திருந்து கழுவினால் சீரற்ற முக நிறம் சமமாகும். வாரம் இரண்டு முறை செய்யுங்கள்.

    * முட்டையில் வெள்ளையில் மைய அரைத்த கேரட் ஒன்று அதோடு 3 ஸ்பூன் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்துகொள்ளுங்கள். அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். இதனால் முகச்சுருக்கம், கருவளையம் போன்றவை நீங்கி பளிச்சென தெரியும்.

    * தேன், தயிர் ஒரு ஸ்பூன் அதோடு முட்டை வெள்ளை பகுதி சேர்த்து நன்குக் கலந்து கொள்ளுங்கள். அதை முகம் மட்டுமன்றி கழுத்திலும் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதை குளிக்கும் முன் செய்தால் சிறப்பு. இதனால் முகம் ஈரப்பதத்துடன், வெயில் தாக்கத்தையும் கட்டுப்படுத்தும்.

    * ஒரு பௌலில் 2 முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து முகத்தின் மேல் தடவ வேண்டும். பின் 5 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு தேய்த்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிப்பதைக் காணலாம். முக்கியமாக இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

    * 2 முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தக்காளி சாறு மற்றும் 1 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இம்முறையினால் தக்காளியில் உள்ள லைகோபைன் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுத்து, சருமத்தை வெள்ளையாக்கும்.

    Next Story
    ×