என் மலர்
பெண்கள் உலகம்
சந்தையில் பெண்களுக்கான வாகனங்கள் ஏற்படுத்திய தாக்கம்
- ஆண்களுக்கு நிகராக அனைத்து துறையிலும் பெண்களும் முன்னேற தொடங்கினர்.
- பெண்களின் தேர்வாக மட்டுமே ஸ்கூட்டர்கள் உள்ளன என்று கூறிவிட முடியாது.
பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இருசக்கர வாகனங்களை சற்று நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு முறை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றாலும் சாய்த்து, நிமிர்த்தி என அதோடு போராடாமல் பயணிக்கவே முடியாது.
இதனாலேயே பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கூட்டர்கள் ஆண்களுக்கான வாகனமாக கருதப்பட்டது. மேலும் திடீரென பஞ்சர் ஆனால் அதை சரிசெய்ய அக்காலத்தில் போதிய வசதியும் இல்லாத நிலை இருந்தது. இருசக்கர வாகன எடை, உதைத்துதான் ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்ற நிலையால் ஸ்கூட்டர்களை பெண்கள் நினைத்து பார்க்கவே இல்லை.
காலப்போக்கில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறையிலும் பெண்களும் முன்னேற தொடங்கினர்.
பெண்களின் ரசனை மற்றும் எளிதான இயக்கத்துக்கு ஏற்ற வகையில் ஸ்கூட்டர்களை நிறுவனங்கள் தயாரிக்க தொடங்கின. பெண்களின் விருப்பத்திற்கேற்ப இலகு ரக அதாவது எடை குறைந்த அதேசயம் செல்ப் ஸ்டார்ட்டர்களை கொண்ட ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வரத்தொடங்கின.
சில வெளிநாட்டு நிறுவனங்களும் சந்தையில் ஸ்கூட்டர்களை அதிக அளவில் சந்தைப்படுத்த தொடங்கின. ஆண்களின் வாகனமாக மாறிய மோட்டார் சைக்கிள்களின் வேகம், ஸ்டைல் மற்றும் மைலேஜ்களை போல, பெண்களுக்கான வாகனமாக மாறிய ஸ்கூட்டர்களிலும் எதிர்பார்க்க தொடங்கினர்.
2005-ம் ஆண்டில் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக இருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் இது 36 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெண்களின் தேர்வாக மட்டுமே ஸ்கூட்டர்கள் உள்ளன என்று கூறிவிட முடியாது. நகரங்களின் வாகன நெரிசலுக்கு ஏற்ப பயணிக்க 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தற்போது கியர் இல்லாத இருசக்கர வாகனங்களை வாங்க விரும்புவதாகவும் இதுசம்பந்தமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.