என் மலர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தையின்மைக்கு சிறந்த தீர்வாகும் ஐ.வி.எப் சிகிச்சை முறை
Byமாலை மலர்22 Jun 2021 10:10 AM IST (Updated: 22 Jun 2021 10:10 AM IST)
ஐ.வி.எப் எனப்படும் மருத்துவ சிகிச்சை முறை குழந்தையின்மைக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. இந்த ஐ.வி.எப் சிகிச்சைக்கான காலகட்டம் 2 முதல் 3 மாதங்களாகும். 35 முதல் 45 வயதுட்பட்ட பெண்களுக்கு பொருத்தமானது.
குழந்தையில்லாமல் தவிக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் இன்றைய நவீன மருத்துவ உலகத்தில் சாத்தியமாகி இருக்கிறது. ஐ.வி.எப் எனப்படும் மருத்துவ சிகிச்சை முறை குழந்தையின்மைக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. ‘இன் விட்ரோ பெர்டிலைலேஷன்’ எனப்படும் இது கரு உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் இனப்பெருக்கம் சார்ந்த மருத்துவ தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான செயல்முறையாகும். கருச்சிதைவு, பிறவிக் குறைபாடு, அசாதாரணமான கருத்தரிப்பு சூழல்களை தவிர்த்து கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை மேம்படுத்த உதவுகிறது. இந்த ஐ.வி.எப் சிகிச்சைக்கான காலகட்டம் 2 முதல் 3 மாதங்களாகும். 35 முதல் 45 வயதுட்பட்ட பெண்களுக்கு பொருத்தமானது.
ஐ.வி.எப். கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ளும்போது கவனிக்க வேண்டியவை:
1. உடலுக்கு தேவையான ஓய்வு முக்கியம். அது சோர்வை போக்கும். உடல் நலத்தையும் பாதுகாக்கும். குறிப்பாக தினமும் போதுமான நேரம் தூங்கும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
2. குடும்பத்தினரின் அருகாமையும், ஆதரவும் அவசியம். நெருக்கமாக பழகுபவர்கள், குடும்பத்தினரிடம் நேரத்தை செலவளிக்கும்போது மனம் இலகுவாகும். உடல் மற்றும் மன நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
3. பிரஷ்ஷாக கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை உள்ளடக்கிய சமச்சீர் உணவு பழக்கத்தை பின்பற்றுங்கள்.
4. ஆழமாக சுவாசிக்கும் யுக்திகளை கடைப்பிடிப்பது மனதை அமைதிப்படுத்தும் மற்றொரு சிறந்த வழிமுறையாகும். காற்றோட்டமான இடத்தில் சவுகரியமாக அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்து சுவாசிக்கலாம். அது மனதை மட்டுமல்ல நரம்புகளையும் வலுப்படுத்தும்.
5. கருத்தரிப்பு சிகிச்சையில் இருக்கும் காலகட்டத்தில் கடினமான வீட்டு வேலைகளை தவிர்த்து சின்ன சின்ன வேலைகளை செய்து வரலாம். காபி அதிகம் பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.
6. புகையிலை பொருட்களை தவிர்ப்பதும் முக்கியமானது. அது கருவுறுதலில் சிக்கலை ஏற்படுத்திவிடும். முக்கியமாக டாக்டர்களின் ஆலோசனைகளை பின்பற்றி செயல்படவேண்டும். மன உளைச்சலுக்கோ, நெருக்கடிகளுக்கோ உள்ளாகக்கூடாது.

Next Story
×
X