என் மலர்
அசாம்
- யூடியூபரின் கருத்து பெரும் கண்டத்திற்கு உள்ளானது.
- யூடியூபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு.
பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா. பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் இவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் India's Got Latent நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம் கோபத்தை ஏற்படுத்தக்கூடிய கேள்வியை கேட்டார். இவரது கேள்வி அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் இருந்தது.
இதையடுத்து ரன்வீர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ரன்வீர் அல்லாபாடியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஹேமந்த் பிஸ்வா, "இன்று கவுகாத்தி காவல் துறையினர் சில யூடியூபர்கள் மற்றும் சமூக வலைதளInfluencers மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி அசிஷ் சஞ்சல்னி, ஜஸ்பிரீத் சிங், அபூர்வா மகிஜா, ரன்வீர் அல்லாபாடியா மற்றும் சமய் ரெய்னா மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
India's Got Latent நிகழ்ச்சியில் ஆபாச மற்றும் தரக்குறைவான விவாதத்தில் ஈடுபட்டதாக இவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்தடுப்பீர்கள் என்று கேட்டார்.
- மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஜனவரி 26 வரை 5 இசைக்கச்சேரிக்குகளை இக்குழு நடத்தியது.
- அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் Coldplay இசைக்குழு நடத்திய கச்சேரி வரவேற்பை பெற்றது.
பிரிட்டனை சேர்ந்த பிரபல இசைக்குழுவான கோல்ட் பிளே[Coldplay] 'மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ்' என்ற தலைப்பில் வேர்ல்டு டூரின் ஒரு பகுதியாக இந்தியா வருகை தந்தது. மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஜனவரி 26 வரை 5 இசைக்கச்சேரிக்குகளை இக்குழு நடத்தியது.
பல மாதங்களுக்கு முன்னதாகவே இந்நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்த்திருந்தன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் Coldplay இசைக்குழு நடத்திய கச்சேரியை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.
இந்நிலையில் கோல்ட் பிளே கச்சேரிகளைச் சிலாகித்துள்ளார். இந்தியாவில் நேரலை இசை நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்று அவர் கூறினார்.
நாட்டில் இசைக்கச்சேரி பொருளாதாரம் மேம்பட்டு வருவதாகவும் இந்த துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், மாநில அரசுகளும், தனியார் துறையும் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக மோடி கூறினார்.
புவனேஸ்வரில் நடந்த ஒடிசா கான்க்ளேவ் 2025 நிகழ்ச்சியில் பேசிய மோடி, மும்பை மற்றும் அகமதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கோல்ட்ப்ளே கச்சேரிகளின் அற்புதமான படங்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இந்தியாவில் நேரடி கச்சேரிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்பதை இது காட்டுகிறது.

உலகெங்கிலும் உள்ள பெரிய கலைஞர்கள் இந்தியாவை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளின் போக்கு அதிகரித்துள்ளது என்றார்.
அடுத்ததாக 'மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ்' வேர்ல்டு டூரின் ஒரு பகுதியாக கோல்ட் பிளே குழு ஹாங் காங் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பண்டிகையின்போது பாரம்பரிய உடையணிந்து வாலிபர்களும் இளம்பெண்களும் இணைந்து பிகு நடனம் ஆடுவார்கள்.
- குழந்தையை சமூக வலைத்தளவாசிகள் பாராட்டி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
அசாம் மாநிலத்தின் கலாசார நடனமாக பிகு உள்ளது. பண்டிகையின்போது பாரம்பரிய உடையணிந்து வாலிபர்களும் இளம்பெண்களும் இணைந்து பிகு நடனம் ஆடுவார்கள். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிரியங்கா. பிகு நடன கலைஞரான இவர் தனது நடன வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பிரபலமாக உள்ளார்.
இந்தநிலையில் பிரியங்கா புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது குழந்தையுடன் இணைந்து அவர் பிகு நடனமாடினார். பாரம்பரிய உடையணிந்த அந்த குழந்தை துள்ளலான இசைப்பாடலுக்கு தனது தாயுடன் சேர்ந்து கைகளை காற்றில் அசைத்தும் துள்ளி குதித்தும் உற்சாகமாக நடனமாடியது.
தாய்க்கு நிகராக ஈடுபாடுடன் ஆடிய அந்த குழந்தையை சமூக வலைத்தளவாசிகள் பாராட்டி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
- இருவரும் காதலித்து வந்ததை அறிந்த முதியோர் இல்லத்தினர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
- மணமக்கள் அசாம் பாரம்பரிய முறைப்படி உடைகள் அணிந்து வந்தனர்.
கவுகாத்தி:
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.
கோலாகட் மாவட்டத்தில் உள்ள போககாட் பகுதியை சேர்ந்தவர் பத்மேஸ்வர் கோலா (வயது71). வீட்டு வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவரது 2 சகோதரர்களும் காலமான நிலையில் பெல்டோலா பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
இதே போல சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜ்பூரை சேர்ந்தவர் ஜெயபிரபா (வயது65), திருமணமாகாத இவர் கவுகாத்தியில் மத்காரியா பகுதியில் பெண்களுக்கான முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சந்தித்துள்ளனர். பத்மேஸ்வர் கோலா குரல் வளமிக்கவர். இவர் பிகு மற்றும் இந்தி பாடல்களை பாடுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரது குரலில் மயங்கிய ஜெயபிரபா, பத்மேஸ்வருடன் பேசிய போது மனதை பறிகொடுத்தார்.
இருவரும் காதலித்து வந்ததை அறிந்த முதியோர் இல்லத்தினர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்தை மோனாலிசா சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி உள்ளது.
இதையொட்டி மணமக்கள் அசாம் பாரம்பரிய முறைப்படி உடைகள் அணிந்து வந்தனர். அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.
இதுகுறித்து அந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான உத்பால் ஹர்சவர்தன் கூறுகையில், பொது நிதி உதவியுடன் இந்த திருமணம் நடைபெற்றது. சுமார் 4 ஆயிரம் விருந்தினர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் விருந்து பரிமாறினோம் என்றார்.
- எச்எம்பிவி பாதிக்கப்பட்ட குழந்தை திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
- தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருக்கிறது.
சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக்கூடிய மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 13 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் அசாமில் 10 மாதக் குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அசாம் மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதாவது:-
எச்எம்பிவி பாதிக்கப்பட்ட குழந்தை திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருக்கிறது. அசாமில் பதிவான முதல் எச்எம்பிவி தொற்று இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது கண்டறியப்படுகிறது, புதிதாக எதுவும் இல்லை. இந்த வைரஸ் தொற்று பெரும்பாலும் 4 முதல் 5 நாள்களுக்குள் குணமாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திடீரென வெள்ளம் புகுந்ததால் தொழிலாளர்களால் தப்பிக்க முடியவில்லை.
- மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அசாம் மாநிலம் திமா ஹசாயோ மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெள்ளம் புகுந்ததால் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் திமா ஹசாயோ மாவட்த்தில் உள்ள உம்ராங்சோவில் உள்ள 3 கிலோ பகுதியில் உள்ள அசாம் நிலக்ககரி குவாரியில் நடந்துள்ளது.
இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் "நிலக்கரிச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள உம்ராங்ஷுவிலிருந்து துயரமான செய்தி வந்துள்ளது. சரியான எண்ணிக்கை மற்றும் நிலை இன்னும் தெரியவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் எனது சக ஊழியர் கௌசிக் ராய் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அனைவரின் பாதுகாப்பிற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மீட்புப் பணிக்காக ராணுவ உதவி கேட்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமா ஹசாயோ எஸ்.பி. மயங்க் ஜா "சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். திடீரென வெள்ளம் வந்ததால் தொழிலாளர்கள் உடனடியாக சுரங்கத்தில் இருந்து தப்ப முடியாத நிலை ஏற்படடது என நேரில் சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
- ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாயகம் அசாம்
- சுற்றுலாப் பயணிகளின் ஜீப்பை நோக்கி மற்றொரு காண்டாமிருகம் ஆக்ரோஷமாக வருவதைக் காண்கிறோம்.
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாயகமான அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா இயற்கை ஆர்வலர்களுக்கு விருப்பமான இடமாகும்.
இங்கு ஜீப் வண்டி சஃபாரி சவாரி மூலம் பார்வையாளர்களுக்கு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் மற்றும் பிற விலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பை கிடைக்கிறது. வழக்கான இந்த சஃபாரி ஒரு தாய் மற்றும் அவரது மகளுக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது.
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில், ஆக்ரோஷத்துடன் காண்டாமிருகங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பார்வையாளர்களை ஏற்றிக்கொண்டு மூன்று ஜீப் வண்டிகள் அங்கு வருகிறது.
அதில் ஒரு ஜீப் வலதுபுறம் திரும்பும்போது உள்ளே ஒரு தாய் தனது மகளுடன் சேர்ந்து தரையில் விழுகிறார். தாய் உதவி கேட்டு கூப்பாடுபோடத் தொடங்கினார்.
அந்த நேரத்தில், சுற்றுலாப் பயணிகளின் ஜீப்பை நோக்கி மற்றொரு காண்டாமிருகம் ஆக்ரோஷமாக வருவதைக் காண்கிறோம்.
பதறியடித்த தாய் சுதாரித்துக்கொண்டு மகளுடன் வேகமாக ஓடி ஜீப்பில் ஏறி ஆக்ரோஷத்துடன் நெருங்கிய காண்டாமிருகத்திடம் இருந்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். மற்றொரு ஜீப்பில் இருந்த சுற்றுலாப்பயணி இந்த பயங்கர சம்பவத்தை கேமராவில் படம்பிடித்துள்ளார். இந்த இந்த சம்பவம் காசிரங்கா தேசிய பூங்காவின் பகோரி மலைத்தொடரில் நடந்துள்ளது.
- பராக் பள்ளத்தாக்கில் மனித வாழ்விடத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரியது.
- வனவிலங்கு ஆராய்ச்சியாளரும் பாதுகாவலருமான பிஷால் சோனார் தலைமை ஏற்றார்
அசாமின் சில்சார் பகுதியில் சுமார் 100 கிலோ எடையுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 17 அடி நீளமுள்ள, பர்மிய மலைப்பாம்பு பராக் பள்ளத்தாக்கில் மனித வாழ்விடத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரியது.
அசாம் மாநிலம் சில்வார் பகுதியில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி அருகே சுமார் 100 கிலோ எடையுள்ள ராட்சத பாம்பு நுழைந்துள்ளது.
கடந்த 18 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிட்டத்தட்ட 100 கிலோகிராம் எடையுள்ள 17 அடி நீளமுள்ள இந்த பர்மிய மலைப்பாம்புபராக் பள்ளத்தாக்கில் மனித வாழ்விடத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரியது.
பாம்பு வந்தது குறித்த தகவலின் பேரில் வனவிலங்கு ஆராய்ச்சியாளரும் பாதுகாவலருமான பிஷால் சோனார் மற்றும் அவரது உதவியாளர் திரிகல் சக்ரவர்த்தி உள்ளிட்ட 13 பேர் சேர்ந்து பாம்பை மீட்டனர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
- குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டத்தை அசாம் தொடர்கிறது.
- 335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அசாமில் குழந்தை திருமணங்களை தடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கட்டமாக 3,483 பேர் கைது செய்யப்பட்டு 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அக்டோபர் மாதத்தில் 915 பேர் கைது செய்யப்பட்டு 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் 3-ம் கட்டமாக நடந்த நடவடிக்கையில் 416 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டத்தை அசாம் தொடர்கிறது. டிசம்பர் 21, 22-ந்தேதிகளில் இரவு தொடங்கப்பட்ட 3-வது கட்ட நடவடிக்கை களில், 416 பேர் கைது செய்யப்பட்டனர். 335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். நாங்கள் தொடர்ந்து துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்போம். இந்த சமூகத் தீமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் நிஜுத் மொய்னா என்ற திட்டத்தை முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார். இதில் 11-ம் வகுப்பு முதல் முதுகலை வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.
- பெண்கள் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி, சீனாவின் லி ஹுவா, வாங் ஜி ஜோடியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் இந்திய ஜோடி 21-18, 21-12 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அன்மோல் கார்ப், சீனாவின் காய் யான் யானிடம் 21-14, 13-21, 19-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டார்.
- கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.
- இதில் இந்திய வீரரான சதீஷ்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சதீஷ்குமார் கருணாகரன், சீனாவின் ஜூ ஜுவான் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் சதீஷ்குமார் 21-17, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
கடந்த ஆண்டு நடந்த ஒடிசா மாஸ்டர்ஸ் சூப்பர் 100 போட்டியில் சதீஷ்குமார் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை அன்மோல் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் அன்மோல் கர்ப், சக வீராங்கனை மான்சி சிங்குடன் மோதினார்.
இதில் அன்மோல் கர்ப் 21-19, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி வெறும் 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் 13-21, 21-14, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீரரை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி, சீனாவின் கெங் ஷு லியாங்-வாங் டிங் கெ ஜோடியை 21-14, 21-14 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.