என் மலர்
பீகார்
- பீகார் அரசின் மதுவிலக்கு சட்டம் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு வழிவகுத்துள்ளது.
- மதுவிலக்கு சட்டம் அரசு அதிகாரிகள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனையும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. இதனால் கள்ளச்சாராயம் குடித்து பலர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.
பீகார் மாநில கலால் துறையின் சோதனையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை பதுக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி காவல் நிலைய ஆய்வாளர் முகேஷ் குமார் பாஸ்வான் 2020 நவம்பரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தனது சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் முகேஷ் மனுத்தாக்கல் செய்தார். அக்டோபர் 29 அன்று இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரின் சஸ்பெண்ட்-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது. நீதிபதியின் 24 பக்க உத்தரவு நவம்பர் 13-ம் தேதி இணையத்தில் பதிவேற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணேந்து சிங், "பீகார் அரசின் மதுவிலக்கு சட்டம் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு வழிவகுத்துள்ளது. இது அரசு அதிகாரிகள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது" என்று காட்டமாக கருத்து தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், காவல்துறை அதிகாரிகள், கலால் அதிகாரிகள் மட்டுமல்ல, மாநில வரித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் மதுவிலக்கை விரும்புகிறார்கள். அவர்களுக்கு இதனால் பெரியளவில் பணம் கிடைக்கிறது.
மது அருந்தும் ஏழைகளுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளுடன் ஒப்பிடும்போது, சட்டவிரோதமாக மது கடத்தும் கும்பல்களின் மீதான வழக்குகள் குறைவாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.
- தமிழக பழங்குடி தம்பதியுடன் பிரதமர் மோடி செல்பி எடுத்துக் கொண்டார்.
- இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாட்னா:
பழங்குடியின தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. பிர்சா முண்டா பிறந்த தினத்தை பழங்குடியினரின் பெருமித தினமாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பீகார் மாநிலம் ஜமுய் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு அவரை பழங்குடியின மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களின் இசை வாத்தியத்தைக் கண்டு ஆச்சரியமடைந்த பிரதமர் மோடி, அதை வாங்கி தானும் இசைத்து மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த கண்காட்சியில், பழங்குடியின மக்களின் பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அங்கு அரியலூரைச் சேர்ந்த தர்மதுரை, எழிலரசி தம்பதியினர் கடை ஒன்றை அமைத்திருந்தனர். பிரதமர் மோடி அங்கு வந்தபோது, தமிழக பழங்குடியின தம்பதியினர் தாங்கள் காட்சிக்கு வைத்திருந்த பொருட்களை பற்றி கூறினர்.
அதன்பின் அவருடன் ஒரு செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி அவர்களுடன் ஒரு செல்பி போட்டோ எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்த பவுர்ணமி நாளில் அன்னதானம் செய்வது பல வகையில் சிறப்பானது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பவுர்ணமி தினம் என்றால் வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாகும். ஒவ்வொரு மாதத்தில் வரும் பவுர்ணமி நாளுக்கு வெவ்வேறு சிறப்புகள் உள்ளன. அந்த வகையில், ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி விசேஷம் ஆகும்.
இந்த ஐப்பசி மாத பவுர்ணமி வெள்ளி அன்று வந்துள்ளதால் அம்பாள் வழிபாடு செய்ய உகந்தது. அன்னாபிஷேகம் நடைபெறுவதால் ஈசனை அன்னாபிஷேகக் கோலத்தில் காண்பது அன்னதோஷம் போக்கும். இந்த பவுர்ணமி நாளில் அன்னதானம் செய்வது பல வகையில் சிறப்பானது.
இந்த நிலையில், பவுர்ணமி பூஜைக்காக கங்கை நதியில் நீராட ஒரே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் வாகனங்களில் கிளம்பியதால் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பிரதான சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பீகார் மாநிலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் நிதிஷ்குமாரும் பிரமர் மோடியும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
- அப்போது மோடியின் கால்களை தொட்டு வணங்க நிதிஷ்குமார் முயற்சி செய்துள்ளார்.
2024 பாராளுமன்ற தேர்தலில் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் மோடி 3 ஆவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
? BIG! Bihar CM Nitish Kumar once again tries to touch PM Modi's feet ?– Modi ❤️ Nitish bond is getting stronger & stronger...! pic.twitter.com/dhrxqm3Ecz
— Megh Updates ?™ (@MeghUpdates) November 13, 2024
பீகார் மாநிலம் தர்பங்காவில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரும் பிரதமர் மோடியும் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது மோடியின் கால்களை தொட்டு வணங்க நிதிஷ்குமார் முயற்சி செய்துள்ளார். ஆனால் மோடி நிதிஷ்குமாரை தடுத்து நிறுத்தி அவரிடம் கைகுலுக்கினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே ஆண்டில் 3 ஆவது முறையாக மோடியின் கால்களை தொட்டு வணங்க நிதிஷ்குமார் முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nitish Kumar ji tried to touch feet of PM Narendra Modi! Ram Lakshman? pic.twitter.com/dLoZsNb5xQ
— Amar Prasad Reddy (@amarprasadreddy) June 7, 2024
- நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா மலேசியாவை வீழ்த்தியது.
- இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வென்றது.
பாட்னா:
8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென்கொரியா, சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா மலேசியாவை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் தென் கொரியாவுடன் இன்று மோதியது. இதில் இருதரப்பினரும் சிறப்பாக ஆடினர்.
இறுதியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி 2வது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தியா தரப்பில் தீபிகா இரு கோல்களும், சங்கீதா குமாரி ஒரு கோலும் அடித்து அணி வெற்றி பெற பங்காற்றினர்.
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் தாய்லாந்துடன் நாளை மறுதினம் மோத உள்ளது.
- நிதிஷ் குமார் தலைமையின் கீழ் வகுப்புவாத சக்திகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
- மாநிலத்தின் சமூக கட்டமைப்பு பலவீனப்படுத்தப்டுகின்றன.
பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாரை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக தேஜஸ்தி யாதவ் கூறியதாவது:-
நிதிஷ் குமார் நிலையற்ற அரசியில் நிலையை கொண்டவர். நிதிஷ் குமார் மகாத்மா காந்தி பெயரை எடுத்துக் கொள்கிகிறார். ஆனால், நாதுராம் கோட்சேவை இதயத்தில் வைத்திருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும வகுப்புவாத சக்திகள் பீகார் மாநிலத்தில் அதிகரிப்பதற்கு நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும். பீகாரில் இந்த இவைகள் அதிகரிக்க அரசு அனுமதித்துள்து. நிதிஷ் குமார் தலைமையின் கீழ் வகுப்புவாத சக்திகள் ஊக்குவிக்கப்படுகின்றன. மாநிலத்தின் சமூக கட்டமைப்பு பலவீனப்படுத்தப்டுகின்றன.
மாநிலத்தில் உள்ள மக்கள் எதிர்கொண்டு வரும் உண்மையான பிரச்சனைகள் குறித்து ஆராய்வதற்குப் பதிலாக பா.ஜ.க. தலைவர்கள் வகுப்புவாத பிரிவினைகளை தூண்டிவிடுகின்றனர். மதம் தொடர்பான பிரச்சனைகளை குறிவைத்து தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். அரசாங்கத்தில் இருந்தால் பிரிவினையை கிளப்பாமல் சாமானியர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
- இந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் உள்ள பரவுனி ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகளை எஞ்சினுடன் இணைக்கும் கப்லிங்கை (COUPLING) பிரிக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக இரண்டு பெட்டிக்கும் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
லோகோ பைலட் எஞ்சினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது.
விபத்து நடந்தவுடன் சுற்றி இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டதும் லோகோ பைலட் அங்கிருந்து ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை வடமாநிலங்களில் கொண்டாடப்பட்டது.
- பாட்னா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கங்கை நதியில் நீராடி சாத் பூஜையை கொண்டாடினர்.
பாட்னா:
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை வடமாநிலங்களில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திரளான பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி சூரியனுக்கு நன்றி செலுத்தினர். அந்த வகையில் பீகாரில் தலைநகர் பாட்னா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கங்கை நதியில் நீராடி சாத் பூஜையை கொண்டாடினர்.
அப்போது வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் சிறுவர்கள் உள்பட 8 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
- மக்களவை எம்.பி. பப்பு யாதவ் 24 மணிநேரதத்தில் பிஷ்னோய் கும்பலை அளித்துவிடுவேன் என்றார்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் அஜித் பவார் சிவ சேனா தலைவரைக் கொன்ற லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய துடித்து வருகிறது. இதனால் அவரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பீகார் பூர்ணியா தொகுதி மக்களவை எம்.பி. பப்பு யாதவ், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணி நேரத்தில் தான் அழித்து விடுவேன் என்றும் பேசினார். இதனால் அவருக்கும் அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
எனவே தனக்கு Z கேட்டகிரி பாதுகாப்பு வேண்டும் என்று பப்பு யாதவ் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேரடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
அதில், எனது உயிருக்கு அச்சுறுத்துதல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் வந்த பிறகும் பீகார் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் செயலிழந்துள்ளது. இப்போது எனக்கு Z கேட்டகிரி பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் எந்த நேரமும் நான் கொலை செய்யப்படலாம் என்று கூறியுள்ள்ளார்.
- ஆபாச பட நடிகை மியா கலிஃபா நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி அந்த முதியவர் விரதம் இருந்துள்ளார்.
- இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி கர்வா சௌத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அந்த நாளில் திருமணமான பெண்கள் தங்கள் கணவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம் வரை விரதம் இருப்பார்கள்
மாலை காலங்களில் கணவர்களும் தங்கள் மனைவிக்காக இந்த நாளில் விரதம் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், பீகாரை சேர்ந்த ஒரு முதியவர் கர்வா சவுத் விரதம் இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது மனைவி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி விரதம் இருப்பதற்கு பதிலாக முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி அந்த முதியவர் விரதம் இருந்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த வீடியோ பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் இத்தகைய செயல்கள் இந்து பண்டிகை மற்றும் அதன் சடங்குகளை அவமதிப்பதாக உள்ளது என்று சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
"करवाचौथ की हार्दिक बधाई एवं शुभकामनाएं"#KarwaChauth #करवा_चौथ pic.twitter.com/wmn6CBOQTE
— गुरु जी (@guru_ji_ayodhya) October 20, 2024
- டேங்கரில் இருந்த சுமார் 200 பீர் பெட்டிகள் கலால் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பலர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்த பெட்ரோலிய டேங்கர் லாரியை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
பெட்ரோலிய டேங்கர் லாரியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி கொண்டு வரப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். லாரியின் ஓட்டுநர் தப்பித்து ஓடிய நிலையில் நாகாலாந்து மாநில பதிவு எண் கொண்ட டேங்கர்லாரியை போலீசார் கைப்பற்றினர்.
இந்துஸ்தான் பெட்ரோலிய டேங்கரில் இருந்த சுமார் 200 பீர் பெட்டிகள் கலால் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால் அடிக்கடி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மாநிலத்திற்குள் கொண்டு வரப்படுகின்றன. சில சமயங்களில் ஆம்புலன்ஸ்களில் கூட மதுபாட்டில்கள் கொண்டு வந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
पेट्रोल टैंकर से शराब की तस्करीबिहार : मुजफ्फरपुर में हाजीपुर मार्ग पर उत्पाद विभाग की टीम ने तेल टैंकर से विदेशी शराब और बीयर बरामद की है. हालांकि टैंकर चालक मौके से फरार हो गया. टैंकर जब्त कर थाने ले जाया गया है. मामले की जांच जारी है. #Bihar | #OilTanker pic.twitter.com/rqGIlg2vSo
— NDTV India (@ndtvindia) October 23, 2024
- பீகாரில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.
- ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லை பகுதியில் இருந்து பீகாருக்குள் வரும் வாகங்களையே போலீசார் சோதனை செய்தனர்.
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.
அண்மையில் கூட பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 37 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது செயற்கை கால்களுக்குள் மது பாட்டில்களை மறைத்து வைத்து கடத்திய போது போலீசில் பிடிபட்டுள்ள சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பங்கா மாவட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லை பகுதியில் இருந்து பீகாருக்குள் வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வந்தனர். அப்போது மகேஷ்குமார் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஸ்கூட்டியில் அவ்வழியே வந்துள்ளார்.
போலீசாரை பார்தததும் பதட்டப்பட்ட அந்த இளைஞரை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அணிந்திருந்த செயற்கை காலில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு ரக மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் அவரின் ஸ்கூட்டியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த மாற்றுத்திறனாளி இளைஞரை கைது செய்த போலீசார் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.