என் மலர்
ராஜஸ்தான்
- ராஜஸ்தானின் கோடா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிடுகிறார்.
- கோடா நகரில் ஓம் பிர்லா தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், கோடா நகரில் ஓம் பிர்லா தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து, ஓம் பிர்லா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் மூன்றாவது முறை ஆட்சிக்கு மக்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர் என தெரிவித்தார்.
#WATCH | BJP leader Om Birla filed nomination from Rajasthan's Kota Lok Sabha constituency today pic.twitter.com/9eHVa95glf
— ANI (@ANI) April 3, 2024
- ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்புடி பகுதியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
- அப்போது அவர் பேசுகையில், இந்தியா கூட்டணி நாட்டிற்காக போட்டியிடவில்லை என்றார்.
ஜெய்ப்பூர்:
பாராளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் சென்றார். அங்கு கோட்புடி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் அரசியல் இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் பா.ஜ.க. முதலில் தேசம் என்று இருக்கிறது, மறுபுறம் நாட்டைக் கொள்ளையடிக்க வழிகளைக் கண்டுபிடிக்கும் காங்கிரசும் இருக்கிறது.
ஒட்டுமொத்த நாட்டையும் ஒரு குடும்பமாக பா.ஜ.க. கருதுகிறது. தேசத்தைவிட தங்கள் குடும்பத்தைக் காங்கிரஸ் பெரிதாக கருதுகிறது.
காங்கிரஸ் வெளிநாட்டிற்குச் செல்லும்போது நாட்டை துஷ்பிரயோகம் செய்துவரும் நிலையில், பா.ஜ.க. நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளது.
ஆத்மநிர்பர் பாரத் கனவை நனவாக்கவே இந்த தேர்தல். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி நாட்டிற்காக போட்டியிடவில்லை, தங்கள் சுயநலத்துக்காக போட்டியிடுகிறது. ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என்கிறார்கள்.
தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பேசாமல் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாடு தீப்பற்றி எரியும் என மிரட்டும் முதல் தேர்தல் இது என தெரிவித்தார்.
#WATCH | Rajasthan: While addressing the Vijay Shankhnad rally in Kotputli, PM Modi says, "This election is to fulfil the dream of 'Atmanirbhar Bharat'...Modi says to remove corruption...Congress & INDI alliance are not contesting this election for the country but for their own… pic.twitter.com/4xmuvSkfT6
— ANI (@ANI) April 2, 2024
- வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார்
- இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும் - பாஜக எம்.பி ஆனந்த குமார்
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார்.
அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என ராஜஸ்தான் மாநிலம் நாகூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோதி மிர்தா மக்களிடையே பேசுகையில், "அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும். அதற்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பலம் வேண்டும். அதற்கு பெரியளவில் பெரும்பான்மை பெற்று இம்முறை நாம் வெற்றி பெற வேண்டும்" என கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக இதே போல அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கர்நாடகா பாஜக எம்.பி அனந்த் குமார் ஹெக்டே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மார்ச் 9-ம் தேதி கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தின் சித்தாபுராவில் உள்ள ஹலகேரி என்ற கிராமத்தில், முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க எம்.பியுமான அனந்த் குமார் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.
அப்போது, "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும். இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி ஏன் கூறினார். தற்போது மக்களவையில் 2/3 பெரும்பான்மையாக நாம்தான் இருக்கிறோம். ஆனால், மாநிலங்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. மாநில அரசுகளிலும் நமக்குத் தேவையான பெரும்பான்மை இல்லை.
எனவே, அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையைப் பெறுவது அவசியம். இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும். அதற்கு, இந்த பெரும்பான்மை போதாது." எனப் பேசினார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையானது.
இதனையடுத்து 6 முறை எம்.பி ஆக இருந்த ஆனந்த குமாருக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"பெரும்பான்மை பெற பாஜக விரும்புவதன் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியதும் ஆனந்த் ஹெக்டேவை வேட்பாளர் பட்டியலிலிருந்து பாஜக நீக்கியது. இப்போது இன்னொரு பாஜக வேட்பாளர், அரசியல் சாசனத்தை மாற்றுவதே பாஜகவின் நோக்கமென வெளிப்படையாக பேசியிருக்கிறார். உண்மையை எத்தனை நாள் பாஜக மறைக்க முயலும்?" என தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 3 பிரிவினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
- பெண்களுக்கு மாதம் உதவி தொகை கொடுப்பது பற்றி அறிவிப்புகள் வர உள்ளன.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இந்த தடவை மிகவும் வித்தியாசமான கோலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர். சமீபத்தில் அந்த அறிக்கை காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வருகிற 6-ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட காங்கிரஸ் மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இதற்கான விழா நடக்கிறது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக நேற்று காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 3 பிரிவினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிமொழி அளிக்கப்பட உள்ளது.
அதுபோல பெண்களுக்கு மாதம் உதவி தொகை கொடுப்பது பற்றி அறிவிப்புகள் வர உள்ளன. இதனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மோத உள்ளன.
கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ச்சியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.
- வாலிபர் கோவிலில் திருடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- காணிக்கை பெட்டியில் கையை போட்டு அதில் இருந்த பணம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை திருடி கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் இருந்தது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ஆதர்ஸ் நகரில் ஒரு கோவில் உள்ளது. இந்த கோவிலிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இந்த கோவில் ஊழியர்கள் கதவை திறந்த போது அங்கு காணிக்கை பெட்டியில் இருந்து பணம், நகை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நபர் கோவிலுக்கு வரும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. அந்த நபர் காணிக்கை பெட்டி அருகே சென்று கடவுள் முன்பு கை நீட்டி வழிபட ஆரம்பிக்கிறார். அதன் பிறகு காணிக்கை பெட்டியில் கையை போட்டு அதில் இருந்த பணம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை திருடி கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் இருந்தது.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் கோவிலில் கைவரிசை காட்டியது அதே பகுதியை சேர்ந்த கோபேஷ் சர்மா என்பதும், இவர் கோவில்களை குறிவைத்து திருடும் பழக்கம் கொண்டவர் என்பதும் தெரியவந்தது. இரவு நேரங்களில் கோவில் கதவுகளை உடைத்து, கடவுளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து நகை, பணத்தை திருடுவதை வாடிக்கையாக கொண்ட இவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே இவர் கோவிலில் திருடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரெயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.
- நான்கு பெட்டிகள் தடம் புரண்டதில், உயிர்ப்பலி ஏதும் நிகழவில்லை.
குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சபர்மதி- ஆக்ரா விரைவு ரெயில் சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை புறப்பட்ட இந்த ரெயில், நள்ளிரவு ஒரு மணி அளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென தடம் புரண்டது. ரெயில் இன்ஜின் உடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் உயிர்ப்பலி ஏதும் நிகழவில்லை. தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என வடமேற்கு ரெயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது.
டெல்லி நோக்கி செல்லும், டெல்லியில் இருந்து வரும் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்து. உத்தர பிரதேசம் நோக்கி செல்லும் பாதை சீரமைப்பு நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளது.
ரெயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் ஆறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டு ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளது.
- தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
- முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜனதாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியதாவது:-
அரியானா மாநிலத்தில் தற்போது எம்.பி.யாக இருக்கும் நபர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ராஜஸ்தானில் கூட மக்களவை எம்.பி.யாக இருந்தவர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ஆகவே, தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எம்.பி.க்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜனதாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு, எங்களது தலைவர்களின் மீது நம்பிக்கை வைப்பவர்கள் வரவேற்கப்பட்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்களின் செயல்பாடுகள் மற்றும் கட்சி மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
பல மாநிலங்களுக்கு சென்றுள்ளேன். இந்தியா கூட்டணிக்கு நல்ல சூழல் உருவாகி வருகிறது. முக்கியமான போட்டி, குறிப்பாக வட இந்தியாவில் காங்கிரஸ்க்கும் பா.ஜனதாவுக்கும் இடையில்தான்.
இவ்வாவறு சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
- உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் ராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
- இந்த ஒத்திகை பயிற்சியை பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சியும் நடத்தப்பட்டது. சுமார் 50 நிமிடங்கள் இந்தப் பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியில் கடற்படை ஏவுகணைகள், விமானப்படை தேஜஸ் இலகுரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், டேங்கர்கள் உள்பட பல்வேறு ராணுவ உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
துல்லியமான வழிகாட்டும் ஏவுகணை, தகவல் தொழில்நுட்ப அமைப்பு, தானியங்கி ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு அமைப்பு போன்ற புது தொழில்நுட்பங்களும் பரிசோதிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த ஒத்திகை பயிற்சியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிட்டார். பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே ஆகியோரும் பார்வையிட்டனர். மேலும், 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பார்வையிட்டனர்.
- விமானப் படைக்குச் சொந்தமான போர்விமானம் ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கியது.
- விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஜெய்ப்பூர்:
இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜாஸ் இலகு ரக போர்விமானம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
#WATCH | Rajasthan | A Light Combat Aircraft (LCA) Tejas of the Indian Air Force crashed near Jaisalmer today during an operational training sortie. The pilot ejected safely. A Court of Inquiry has been ordered to ascertain the cause of the accident. pic.twitter.com/3JZf15Q8eZ
— ANI (@ANI) March 12, 2024
- எம்.பி ராகுல் கஸ்வான் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
- நேற்று, ஹரியானா மாநிலத்தில் பாஜக எம்.பி பிரிஜேந்திர சிங் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ராஜஸ்தானின் சுரு தொகுதி பாஜக எம்.பி. ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
எம்.பி ராகுல் கஸ்வான் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதில், "மக்களவை உறுப்பினராக 10 ஆண்டுகள் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார்
நேற்று, ஹரியானா மாநிலத்தில் பாஜக எம்.பி பிரிஜேந்திர சிங் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தானில் யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பன்ஸ்வாரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
- அரசு தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவதை தடுப்பதற்கு உரிய சட்டம் இயற்றப்படும் என தெரிவித்தார்.
ஜெய்ப்பூர்:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்நிலையில், ராஜஸ்தானில் இன்று யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பன்ஸ்வாரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சியின் இளைஞர்களுக்கான 5 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினர். அவை பின்வருமாறு:
பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும்.
அனைத்து இளைஞர்களுக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு பயிற்சி. MNREGA போன்றே இந்தப் பயிற்சியை ஒரு சட்டமாக்குவோம். இளைஞர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். மேலும் பயிற்சியின் போது ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
சிறு தொழில்களைத் தொடங்கத் தயாராக இருக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாக ரூ.5,000 கோடியில் ஸ்டார்ட்அப் ஃபண்ட் உருவாக்கப்படும்
கிக் தொழிலாளர்கள் எனப்படும் உணவு டெலிவரி உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நாடுமுழுவதும் சட்டம் இயற்றப்படும்
தேர்வு தாள் கசிவு விவகாரத்தைத் தடுக்க, காகிதக் கசிவுக்கு எதிராக காங்கிரஸ் சட்டம் கொண்டுவரும். அரசு போட்டித் தேர்வுகளை அரசு மட்டுமே நடத்தும், அவுட்சோர்சிங் எதுவும் இருக்காது என தெரிவித்தார்.